துவம்சம் செய்த ரஸல்: மன்கட் அஸ்வின் இப்போ மங்கூஸ் அஸ்வின்
கடந்த போட்டியில் பஞ்சாப் வெற்றி பெற்றதற்கு அஸ்வினின் மன்கட் அவுட் என பலரால் விமர்சிக்கப்பட்டது.
அதே போன்று கொல்கத்தாவிற்கு எதிரான நேற்றைய போட்டியில் அஸ்வினின் மங்கூஸ் தனமான பீல்டிங் நிறுத்தத்தால் தோல்வியைத் தழுவி உள்ளது.
முதலில் டாஸ் வென்ற அஸ்வின் இந்தமுறை பவுலிங் தேர்வு செய்தார். இது மிகப்பெரிய தவறு என போட்டி முடிவில் உணர்ந்திருப்பார்.
டாஸில் தோற்றாலும் எதிர்பார்த்தது போன்றே பேட்டிங் கிடைத்தால் கொல்கத்தா வீரர்கள் பஞ்சாப்பை துவம்சம் செய்துவிடவேண்டும் என்ற முடிவுடனே களத்தில் இறங்கினர்.
ராணா 63, ரஸல் 48, ராபின் உத்தப்பா 67 ராவில் துவங்கும் இந்த மும்மூர்த்திகள் காட்டிய வான வேடிக்கையில் மைதானமே அதிர்ந்தது.
20 ஓவர் முடிவில் 218 ரன்களைக் குவித்தது கொல்கத்தா. பின்னர் களம் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவக் காரணம்
முகமது ஷமி ஓவரில் 3 ரன்கள் இருந்தபோது ரஸல் கிளின் போல்ட் ஆனார். ஆனால் அது வித்தியாசமான நோபாலாக மாறியது.
சர்க்கிள் உள்ளே மூன்று பீல்டர்கள் மட்டுமே இருந்தார்கள். சர்க்கிள் உள்ளே குறைந்தது நான்கு பீல்டர்களை நிறுத்தி இருக்க வேண்டும்.
இதனால் 17 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்றுவிட்டார் ரஸல். அம்பயர் நோபால் என அறிவித்ததும் அஸ்வின் அழாத குறையாக துவண்டுவிட்டார்.
தன்வினைத் தன்னைச்சுடும் என்பதுபோல் அஸ்வினின் பீல்டிங் மிஸ்டேக்கில் கொல்கத்தா ரன்களை அதிகமாகக் குவித்து வெற்றி பெற்றது.