Home திரைவிமர்சனம் Draupathi Movie Review Download: திரௌபதி திரைவிமர்சனம்

Draupathi Movie Review Download: திரௌபதி திரைவிமர்சனம்

6782
1
Draupathi Movie Review Download திரௌபதி திரைவிமர்சனம் படம் எப்படி உள்ளது

Draupathi Movie Review Download: திரௌபதி திரைவிமர்சனம். Tamil Movie Review Watch Online. படத்தின் நாயகி திரௌபதி சபதம் எப்படி நிறைவேறியது? திரௌபதி படம் எப்படி உள்ளது?

திரௌபதி படத்தின் கதை

பணக்கார வீட்டுப்பெண்களாகப் பார்த்து காதலித்து வலையில் வீழ்த்தும் கும்பல். பணத்திற்காக திருமணம் முடித்து பெற்றோர்களிடம் பணம் பறிக்கின்றனர்.

அந்தப்பெண் காதலிக்கவில்லை என்றாலும் கூட போலியாக ரிஜிஸ்டர் திருமணம் சான்றிதழ் தயாரிக்கின்றனர். அதை வைத்து மிரட்டி பணம் பறிக்கின்றனர்.

இவர்களின் நிலை என்ன ஆனது? இதுபோன்ற அசம்பாவிதம் வருங்காலத்தில் நிகழாமல் எப்படி தடுக்கப்பட்டது என்பது மீதிக்கதை.

படத்தின் நாயகி திரௌபதி

நாயகி திரௌபதி ஒரு மனைவியாய் மட்டுமல்லாமல், சமூக சீர்திருத்தவாதியாகவும் செயல்படுவதாக கதாபாத்திரம் அமைக்கப்பட்டு உள்ளது.

நாயகன் ரிஷி ரிச்சர்ட் சிலம்பம் வாத்தியார். வீண் பழியுடன் சிறை சென்றுவிட்டு வெளியில் வந்தவுடன், மனைவி திரௌபதியின் சபதத்தை நிறைவேற்றுகின்றார்.

வில்லன் ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவர். திரௌபதியின் ஊரில் உள்ள தண்ணீரை கோலா கம்பெனிக்கு தாரைவார்த்துக் கொடுக்க முயற்சி செய்கிறார்.

திரௌபதி சபதம்

வில்லனின் முயற்சியைத் தடுக்கும் திரௌபதியின் குடும்பத்தை அவமானப்படுத்த, அவரின் தங்கையை காதல் வலையில் வீழ்த்த முயற்சிக்கின்றனர்.

ஆனால் அந்த கெட்டிக்காரத் தங்கை காதலிக்கவில்லை. இருப்பினும் சில புகைப்படங்களையும், போலி பதிவுத் திருமண சான்றிதழையும் வைத்து குடும்ப மானத்தை சீர் குலைக்கின்றனர்.

இவர்களின் போலித் திருமண நாடகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று திரௌபதி சபதம் ஏற்ற சில நிமிடங்களில் கொல்லப்படுகிறாள்.

அவளின் சபதத்தை நாயகன் ரிஷி ரிச்சர்ட் எப்படி நிறைவேற்றினார் என்பதே மீதிக்கதை. புராண கால திரௌபதி சபதம் படிக்க கிளிக் செய்யவும்.

திரௌபதி படம் எப்படி உள்ளது?

படம் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நகர்கிறது. இரண்டாம் பாதியும் அதே வேகத்திலேயே நகர்கிறது.

படத்தின் க்ளைமேக்ஸ் நம்மை முழு திருப்தி படுத்துகிறது. அந்த அளவிற்கு எமோஷனல் கண்டன்ட் படத்தில் உள்ளது. கிளைமேக்ஸ் காட்சியில் திரௌபதி மீண்டும் அவதரிப்பது கூடுதல் சிறப்பு.

படத்தின் குறைகள்

இந்தப்படம் லோ பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். இதனால் நிறைய புதுமுகங்கள் கொண்டு எடுக்கப்பட்டு உள்ளது.

அதில் சில நடிகர்-நடிகையர் தேர்வு சொதப்பல். அந்த கதையின் தாக்கத்தை அவர்கள் முகங்களில் உணர முடியவில்லை.

மேலும் படம் சற்று ஜாதிய சீர்குலைப்பை பற்றி மட்டும் பேசாமல், ஜாதியை உயர்த்திப்பிடிப்பது போன்ற காட்சிகள் உள்ளது.

கலப்பு காதல் என்றாலே நாடகக் காதல் என்பது போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டு உள்ளது.

நாடகக் காதல் – ஜாதி கலப்புக் காதல்

இந்த படத்தில் சொல்லப்படுவது பணக்கார குடும்பத்தில் உள்ள பெண்ணை மயக்கி பணம் சம்பாதிப்பது அல்லது செட்டில் ஆவது.

இதில் தாழ்ந்த ஜாதியில் உள்ளவர்கள் மட்டும் இதில் ஈடுபடவேண்டும் என்பது அவசியமில்லை. பணம் யாரிடம் எல்லாம் இல்லையோ அவர்களும் இதில் ஈடுபடுவர்கள் எனபதே உண்மை.

எல்லா ஜாதியினரிலும் ஒரு ஏழை, ஒரு பணக்காரன் என்ற பாகுபாடுடன் தான் இந்த சமூகம் உள்ளது.

திரௌபதி படமாக முழுமையான நிறைவு தந்ததா?

நம்மில் எத்தனை பேர் வசதியான குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக வேண்டும் என்று சிறு வயதில் ஆசைப்பட்டு இருப்போம்? ஆசையே பட்டது இல்லை என்று சொல்லிவிட முடியுமா?

இதற்குள் ஜாதி எப்படி வருகிறது. இது இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றில் நடக்கும் ஒன்று தான்.

ஆனால், பணம் பறிப்பதற்காக மட்டுமே இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றுவது கண்டிக்கத்தக்க ஒன்றே.

இந்தக்கால பெண்களிடமும், காதலர்களிடமும் இப்படம் நிச்சயம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் அது எப்படிப்பட்ட விழிப்புணர்வு? நாடகக் காதல் மட்டும் அல்ல, ஏதோ தாழ்த்தப்பட்டவர்கள் என்றாலே வெறுக்கத்தக்கவர்கள் என்ற எண்ணத்தை விதைக்கும் விதமாகவும் உள்ளது.

படம் ஏற்படுத்திய அரசியல்

திரௌபதி படம் ட்ரைலர் வெளியான உடனேயே காரசாரமான விவாதங்கள் அரங்கேறியது. மேல்ஜாதி நியாயத்தை பேச ஒரு இளம் இயக்குனர் வந்துவிட்டார் எனக் கொண்டாடினர்.

படம் வெளியாகும் முன்னரே ராமதாஸ் நான் வெளியிட்ட அறிக்கை காரணமாகவே இந்தப் படம் எடுக்கப்பட்டு உள்ளது என மார்தட்டி கூறினார்.

இது ஒரு சமுதாயத்தில் நிகழும் அவலங்களை மையப்படுத்திய படம். இதை ஒரு படமாகவே பார்க்கவேண்டும்.

இதை அரசியல் ஆக்கி மீண்டும் ஜாதி என்னும் வேரை இளைஞர்கள் மனதில் ஆழமாக பாய்ச்சும் நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றது.

திரௌபதி படம் மட்டுமல்ல இது போன்ற படங்கள் யாருக்கு லாபம்? அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்கள் இந்தப்படத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.

மக்களுக்கு விழிப்புணர்வு என்ற பெயரில் ஜாதி என்னும் வெறியை மனதிற்குள் ஆழமாக விதைத்து வருகின்றனர். மோகன்.ஜி மட்டுமல்ல பா.ரஞ்சித் போன்றவர்களும் தான்.

Draupathi Movie Review Download: திரௌபதி திரைவிமர்சனம். Tamil Movie Review Watch Online.

Previous articleINDWvsSLW-WWCT20I; இலங்கையை வீழ்த்தியது இந்தியா
Next articleDraupathi: தல நல்லா இருக்காரா? ஷாலினியிடம் கேட்ட ரசிகர்
Editor in Chief & Founder of MrPuyal.com

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here