பொள்ளாச்சி பயங்கரம்: நக்கீரன் கோபாலை கைது செய்ய முயற்சி
பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கொடூரமாகத் தாக்கி, பலவந்தமாகக் கூட்டுக் கற்பழிப்பை நிகழ்த்தியுள்ளனர்.
இந்த நிகழ்வை முதன் முதலில் வெளியில் கொண்டு வந்தவர்கள் விகடன் பத்திரிக்கை. அதன்பிறகு நக்கீரன் கோபால் சமந்தப்பட்டவர்களை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டார்.
பொள்ளாச்சி பயங்கரம், பாலியல் வன்கொடுமையில் முக்கியப் புள்ளியாக செயல்பட்டது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது இரண்டு மகன்கள் என பகிரங்கமாக உண்மைகளை வெளியிட்டார் நக்கீரன் கோபால்.
இதன் பிறகே போலீசாருக்கும், தமிழக அரசிற்கும் இந்த வழக்கின் தீவிரம் புரிந்தது. சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் துணிச்சலாக புகார் கொடுத்த பெண்ணின் முழுப்பெயர் மற்றும் முகவரியை அரசாணையில் வெளியிட்டு பகிரங்கமாக மிரட்டியது தமிழக அரசு.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளிவந்து புகார் அளிக்கப் பயந்து நடுங்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், தன்மீது அவதூறு பரப்பியதாக நக்கீரன் கோபால் மீது பொள்ளாச்சி ஜெயராமன் புகார் அளித்துள்ளார்.
இதனால் நக்கீரன் கோபால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.