Home Latest News Tamil கங்குலி மீண்டும் கால்பதித்த ஐ‌பி‌எல் அணி எதுவென்று தெரியுமா?

கங்குலி மீண்டும் கால்பதித்த ஐ‌பி‌எல் அணி எதுவென்று தெரியுமா?

439
0
கங்குலி

கங்குலி மீண்டும் கால்பதித்த ஐ‌பி‌எல் அணி எதுவென்று தெரியுமா?

இது வரை டெல்லி டேர்டெவில்ஸ் என்று அழைக்கப்பட்ட டெல்லி அணி இனிமேல் டெல்லி கேபிட்டல்ஸ் என பெயரை மாற்றி 2019ஆம் ஆண்டு ஐ‌பி‌எல் இல் களம் இறங்க உள்ளது.

இதன் ஆலோசகராக இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். சென்ற வருடம் இளம் வீரர்களை மட்டும் வைத்து அசத்திய டெல்லி அணி இந்த வருடமும் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ரிசப் பாண்ட் சென்ற வருடம் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை தட்டிச் சென்றார். அதே ஃபார்முடன் இந்த வருடமும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் தவான் சன் ரைசர்ஸ் அணியில் இருந்து டெல்லி அணிக்கு மாற்றப்பட்டார். தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தொடர்ந்து பயிற்சியாளர் ஆக நீட்டிக்கப்பட்டுள்ளார்.

முன்னொரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்தவர்கள் பாண்டிங்-கங்குலி. 2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில். கங்குலியின் தலைமையிலான இந்திய அணி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவிடம் தோற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

சிறந்த யுத்திகள் கொண்ட இருவரும் சிறப்பாக செயல்பட்டால் கண்டிப்பாக டெல்லி அணி கோப்பை வெல்லும் என்பதில் எந்தவித ஐய்யமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here