தோனியை வியக்க வைத்த ‘ஹெலிகாப்டர் ஷாட் வீரன்’

ஹெலிகாப்டர் ஷாட்

ஹெலிகாப்டர் ஷாட் இப்படி ஒரு பெயர் கிரிக்கெட் வரலாற்றிலேயே கிடையாது. தோனி வருகைக்கு முன்பு வரை.

இப்படி ஒரு ஷாட் அடித்ததால் முதலில் அவர் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படவில்லை. பிறகு அதே ஷாட்டிற்காவே தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஷாட் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகியது. எனவே இதற்கு ஒரு பெயர் வைத்துவிட்டனர்.

தோனி பேட்டை சுழற்றுவது ஹெலிகாப்டர் டேக்ஆப் ஆகுவது போன்ற ஆக்சனை கொடுத்தால் இதற்கு ஹெலிகாப்டர் ஷாட் என்றே பெயர் வைத்துவிட்டனர்.

ஹெலிகாப்டர் ஷாட்டை கண்டாலே யார்கர் மன்னனும் கதி கலங்கிவிடுவான். யாராலும் அடிக்க முடியாத யார்கர் பாலை அடிக்க சிறந்த ஷாட்டாக இது விளங்கியது.

தற்பொழுது தோனி ஓய்வுக்குபின் இந்த ஷாட் புழக்கத்தில் இருக்குமா என ஒரு கேள்வி இருந்தது.

இந்திய அணியிலேயே அதிகமான வீரர்கள் இதை பிராக்டிஸ் செய்ய துவங்கிவிட்டனர். நேற்றைய போட்டியில் ஹார்த்திக் பாண்ட்யா அடித்ததை சிஎஸ்கே ரசிகர்கள் கூட ரசித்தனர்.

காரணம், ஹார்த்திக் பாண்ட்யா ஹெலிகாப்டர் ஷாட்டை அற்புதமாகப் பறக்கவிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது,

என்னுடைய ஹெலிகாப்டர் ஹாட் மிகவும் பிடிக்கும் என மகேந்திரசிங் தோனியே வியப்புடன் கூறினார் என  பாண்ட்யா கூறினார்.