பாஜகவா? காங்கிரசா? இரண்டையும் விட்டுக்கொடுக்காமல் உள்ளே.. வெளியே.. என மங்காத்தா ஆடி வருகிறார் மகாராஸ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே.
முதல்வர் நாற்காலி மீது ஆசை வந்ததும் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார் உத்தவ்.
இந்நிலையில், குடியுரிமை சட்ட மசோதா பற்றி பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு, அதன் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சிவசேனா நைசாகக் கழன்று கொண்டது.
இதனால் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி கடும் அப்செட். டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து வெளிப்படையாக பொங்கிவிட்டார்.
எங்கே முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என மசோதாவிற்கு எதிராக மீண்டும் கம்பு சுற்றத்துவங்கிவிட்டார் உத்தவ்.
எங்கள் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கவில்லை எனில் குடியுரிமை சட்ட மசோதாவை ஆதரிக்க மாட்டோம் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பாஜகவையும் வருங்கால நலன் கருதி மறைமுகமாக சிவசேனா ஆதரித்து வருவது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.