சிறுமி ஆபாசப் படத்தை சமூக வலைதளங்களில் அப்லோட் செய்த திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ரவி ஒரு அறிவிப்பை வெளியிட்டு வந்தார்.
அவர் கூறியதாவது, உலக அளவில் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் தான் அதிகமாக குழந்தைகள் ஆபாச படம் இணையத்தில் அப்லோட் செய்யப்பட்டு வருகிறது.
குழந்தைகள் ஆபாச வீடியோவை இணையத்தில் அப்லோட் செய்வது சட்டப்படி குற்றம். இந்த குற்றச்செயலை செய்பவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனைகள் கிடைக்கும் எனக் கூறினார்.
எனினும் பலர் இதை அலட்சியமாக கருதி வாட்ஸ்ஆப்பில் ஆபாச வீடியோக்களை அனுப்பி வந்தனர். ஆபாசப்படங்களை டவுன்லோட் செய்து வந்தனர்.
திருச்சியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்ற நபர் ‘நிலவன், வளவன், ஆதவன்’ என்கின்ற பெயர்களில் வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோவைப் பரப்பி உள்ளார்.
இதைக் கண்டறிந்த போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். குற்றம் நிருபிக்கப்பட்டால் சமந்தப்பட்ட நபருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என டி.ஜி.பி. ரவி தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் ஆபாச படங்களைப் பரப்பிய வழக்கில் முதல் முறையாக கைது செய்யப்பட்ட நபர் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.