Home சினிமா கோலிவுட் 17 வருடத்திற்குப் பிறகு யுவன் விஜய் காம்போவில் அந்த கண்ண பாத்தாக்க பாடல்!

17 வருடத்திற்குப் பிறகு யுவன் விஜய் காம்போவில் அந்த கண்ண பாத்தாக்க பாடல்!

442
0
Andha Kanna Paathaakaa

Yuvan Shankar Raja; 17 வருடத்திற்குப் பிறகு யுவன் – விஜய் காம்பினேஷனில் வரும் பாடல்! மாஸ்டர் படத்தில் யுவன் சங்கர் ராஜா அந்த கண்ண பாத்தாக்க (Andha Kanna Paathaakaa) என்ற பாடலை பாடியுள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் Master படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கு முன்னதாக மாஸ்டர் இசை வெளியீட்டு விழா (Master Audio Launch) சென்னை லீலா பேலஸ் (The Leela Palace Chennai) ஹோட்டலில் மிகவும் எளிமையாக நடக்க இருக்கிறது.

இந்த நிலையில், மாஸ்டர் டிராக் லிஸ்ட் Master Track List தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மொத்தம் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

அதில் ஒன்று யுவன் சங்கர் ராஜா Yuvan Shankar Raja குரலில் வரும் அந்த கண்ண பாத்தாக்க Andha Kanna Paathaakaa….என்ற பாடல்தான். இந்தப் பாடலுக்கு விக்னேஷ் சிவன் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

தற்போது டுவிட்டரில், யுவன் சங்கர் ராஜாவிற்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது. கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு யுவன் விஜய் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

இதற்கு முன்னதாக புதிய கீதை (Pudhiya Geethai) படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார்.

அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அண்ணாமலை தம்பி இங்கு ஆடவந்தேன் என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

அந்தப் பாடலை டுவிட்டரில் பதிவிட்டு, புதிய கீதை படத்திற்குப் பிறகு யுவன் சங்கர் மாஸ்டர் படத்தில் இணைந்துள்ளார் என்று பதிவிட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக #Yuvan, #ThalapathyVijay, #MasterTrackList, #MasterAudioLaunch, #TharudhalaKadharuna ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள தருதல கதறுனா என்ற பாடலை ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி மீம்ஸும் உருவாக்கியுள்ளனர்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், அனிருத், கானா பாலசந்தர் ஆகியோர் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleMaster Track List; மாஸ்டர் டிராக் லிஸ்ட் வெளியீடு: மொத்தம் 8 பாடல்!
Next articleமாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு இவங்கலாம் வர்றாங்கலா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here