Home சினிமா கோலிவுட் அழகான குட்டி தேவதை: சந்தோஷத்தில் ராஜா ராணி ஜோடி!

அழகான குட்டி தேவதை: சந்தோஷத்தில் ராஜா ராணி ஜோடி!

9380
0
Alya Manasa Baby Girl

Alya Manasa Blessed With Baby Girl; அழகான குட்டி தேவதை: சந்தோஷத்தில் ராஜா ராணி ஜோடி! வெள்ளித்திரைக்கு ராஜா ராணி ஆர்யா – நயன்தாரா என்றால், சின்னத்திரைக்கு ராஜா ராணி என்றால், இவர்களை மறந்திருக்கவே மாட்டார்கள்.

ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா (Alya Manasa) மற்றும் சஞ்சீவ் (Sanjeev Karthick).

வெள்ளித்திரையை விட மக்களோடு மக்களாக ஒன்றிய சின்னத்திரைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு. அதுவும் குடும்ப பெண்களுக்கு சொல்லவே வேணாம்.

இதில், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகர், நடிகைகளுக்கு வரவேற்பு தாறுமாறாக இருக்கும்.

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையில் ஜொலித்தவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். சீரியல்களில் ஒன்றாக நடித்து இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். அதன் பிறகு திருமணம்  செய்து கொண்டனர்.

சின்னத்திரையில், காதலித்ததை விட நிஜத்திலும் இருவரும் ஒருவருக்கொருவர் அதிகளவில் காதலித்து வந்துள்ளனர்.

சீரியல் ஆனாலும் சரி, டான்ஸ் புரோகிராமாக இருந்தாலும் சரி இருவருக்கும் அப்படியொரு கெமிஸ்டரி.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு அழகான குட்டி தேவதை பிறந்துள்ளதாக சஞ்சீவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆம், ஆல்சா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆல்யா மானசா குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே குழந்தைக்கு தேவையான ஆடைகள், பெட்சீட் என்று எல்லாவற்றையும் வாங்கி குவித்துள்ளார்.

அதற்கான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SOURCER SIVAKUMAR
Previous article2020ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது? கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ!
Next articleமே 28ஆம் தேதி வரை எந்த வித கிரிக்கெட் போட்டிகளும் கிடையாது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here