Amala Paul Second Marriage; 2ஆவது திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய அமலா பால்! நடிகை அமலா பால் தனது இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை அமலா பால் இரண்டாவது திருமணம் குறித்து கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால்.
கடந்த 2011 ஆம் ஆண்டு திரைக்கு தெய்வ திருமகள் படத்தின் மூலம், அமலா பால் மற்றும் இயக்குநர் ஏ.எல்.விஜய் இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.
பின்னர், கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு அமலா பால் விவாகரத்து கோரி விண்ணப்பித்தார். இதையடுத்து 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதையடுத்து, மும்பையைச் சேர்ந்த பாடகர் பாவ்னீந்தர் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அண்மையில் செய்தி வெளியானது.
மேலும், இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பாவ்னீந்தர் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அப்போது அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பாவ்னீந்தர் சிங் அந்தப் புகைப்படங்களை எல்லாம் நீக்கிவிட்டார்.
இதையடுத்து, அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று அமலா பால் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், தனது இரண்டாவது திருமணம் குறித்து தற்போது அமலா பால் கருத்து தெரிவித்துள்ளார். எனது திருமணத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறது.
நான் தற்போது சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அவை முடிந்ததும், எனது திருமணத்தைப் பற்றி அறிவிப்பேன்.
எனது காதல் பற்றி பேசினேன். எனவே எனது திருமணத்தைப் பற்றியும் பேசுவேன். அதுவரை எனது திருமணம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்.
நேரம் வரும் வரை திருமணம் குறித்து அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.