Kavin Corona Virus; பயம் நல்லதுதான் ஆனால் பீதி அடைய வேண்டாம்! பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற கவின் கொரோனா வைரஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக வந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் அன்பைப் பெற்றார்.
தற்போது கொரோனா வைரஸ் குறித்து தனது டுவிட்ட பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பாவி ஜனங்கள் முதல் சினிமா, அரசியல் பிரபலங்கள் என்று பலரும் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டில் சிலர் சமூக வலைதளங்களிலும், சிலர் குடும்பத்தோடும், சிலர் தனிமையிலும் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் குறித்தும், 21 நாட்கள் ஊரங்கு உத்தரவு குறித்தும், பாதுகாப்பு குறித்தும் சினிமா பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிக் பாஸ் பிரபலம் கவின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்த கடினமான நேரத்தில் நம் அனைவருக்கும் நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்கு எதுவும் நடக்கக்கூடாது என்ற பயம் இருக்கிறது.
ஆனால், இந்த பயம் நல்லது. அது தொடர்ந்து நம்முடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில் நாமும் பீதியடைய வேண்டாம். இது போன்ற கடினமான காலங்களில் நாம் அனைவரும் ஒன்றாக நின்றிருக்கிறோம்.
அதேபோல் வீட்டிலேயே தங்கியிருப்பதில் நம்முடைய ஒற்றுமை இதைப் பார்க்கவும் உதவும் என்று நான் நம்புகிறேன்.
நமது பாதுகாப்பிற்காக அயராது உழைக்கும் அனைத்து மக்களையும் நேசிப்போம், கவனிப்போம், அந்த போர்வீரர்கள் அனைவரையும் பிரார்த்தனைகளில் நினைவுகூருவோம் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கவின் பிகில் நடிகை அம்ரிதா ஐயர் உடன் இணைந்து லிப்ட் படத்தில் நடிக்கிறார். அண்மையில், இப்படத்தில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.