Home சினிமா கோலிவுட் உலகமகா நடிகனாக திகழும் சியான் விக்ரம்!

உலகமகா நடிகனாக திகழும் சியான் விக்ரம்!

376
0
Chiyaan Vikram Birthday Today

Chiyaan Vikram; உலகமகா நடிகனாக திகழும் சியான் விக்ரம்! கமல் ஹாசனைத் தொடர்ந்து உலகமகா நடிகனாக சியான் விக்ரம் திகழ்கிறார் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

சியான் விக்ரம் இன்று தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோரைத் தொடர்ந்து அதிக வயதானவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர் சியான் விக்ரம்.

இன்று அவருக்கு வயது 54. ஆனால், பார்ப்பதற்கு இன்றும் அதே இளமையான தோற்றத்தோடுதான் தோற்றமளிக்கிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அப்படி ஒன்றும் பேசப்படவில்லை. விக்ரமின் முதல் படமே 1990 ஆம் ஆண்டு வந்த என் காதல் கண்மணி.

சியான் சேது

என் காதல் கண்மணி படத்திற்குப் பிறகு 9 வருட போராட்டத்திற்குப் பிறகு பாலாவின் சேது படம் விக்ரமை ஒரு மாஸ் ஹீரோவாக உயர்த்தியது.

இன்றும் விக்ரமை சேதுவாக பார்ப்பதற்கு கோடான கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சேது இரண்டாம் பாகம் கூட எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகின்றனர்.

விக்ரமிற்கு சியான் என்ற ஒரு அடையாளத்தை கொடுத்தது சேது படம் தான்.

சேது விக்ரமிற்கு மட்டுமல்ல, சினிமா உலகிற்கும் சிறந்த படமாக அமைந்தது. பாடல்களும் ரசிகர்கள் விரும்பும்படியாகவே அமைந்தது.

இந்தப் படத்தில் விக்ரம் ஒரு முரட்டுத்தனமான காதலனாகவே பார்க்கப்பட்டார்.

சேது படம் தான் விக்ரமை சிறந்த நடிகனாக அறிமுகம் செய்தது.

மசாலா படங்கள்

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் விக்ரம் மசாலா படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். அப்படி அவர் நடித்து வெளிவந்த படங்கள் தான் தில், ஜெமினி, தூள், சாமி ஆகிய படங்கள் வணீக ரீதியாக நல்ல வரவேற்பு கொடுத்தது.

அன்றைய காலகட்டங்களில் எந்த ஒரு நடிகரும் எடுத்து நடிப்பதற்கு தயங்கும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை எடுத்து நடித்தார்.

காசி, சாமுராய்

ஆம், அப்படி அவர் நடித்த படம் தான் காசி. கண்பார்வையற்றவர் கதாபாத்திரம். அதன் பிறகு ராபீன்ஹூட் போன்ற ஒரு கதாபாத்திரம் என்றால் அது சாமுராய் படம்.

பிதாமகன்

கடந்த 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பாலாவின் பிதாமகன் படத்தில் சுடுகாட்டில் புதை குழு தோண்டுபவன், பிணங்களை எரிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து, தன்னை ஒரு சிறந்த நடிகனாக காட்டினார்.

பிதாமகன் படம் விக்ரமிற்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றுக் கொடுத்தது.

அந்நியன்

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வந்த சூப்பர் ஹிட் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் அந்நியன். இந்தப் படம் விக்ரமை ஒரு மல்டிபிள் பெர்சனாலிட்டி டிசார்டர் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது. இப்படம் மூலம், தன்னால், ஒரே நேரத்தில் எத்தனை ரோல்களில் வேண்டுமானாலும் நடிக்க முடியும் என்று காட்டினார்.

அந்நியன் படத்தில் அம்பியாகவும், ரெமோமாகவும், அந்நியனாகவும் கொண்டுவரப்பட்டார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு அந்நியன் படம் சிறந்த பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.

தெய்வ திருமகள்

கண் பார்வையற்றவனாக நடிக்க முடிந்த தன்னால், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை தனமாக கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்றும் காட்டினார். இதற்காக உடல் மெலிந்து வித்தியாசமான ஒரு பேச்சு, சைகை, நடை, உடை, பாவணை என்று எல்லாவற்றையும் மாற்றினார்.

இப்படத்தில் ஒரு குழந்தையாகவே நடித்தார் என்றே கூறலாம். இந்தப் படம் 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.

ஷங்கர் இயக்கத்தில் வந்த ரொமாண்டிக் த்ரில்லர் படம் ஐ. இந்தப் படத்திற்காக 35 கிலோ எடை வரை குறைத்துக் கொண்டுள்ளார். அந்நியன் படத்திற்குப் பிறகு மீண்டும் பல கதாபாத்திரங்கள் கொண்ட சிறந்த படம்.

இதில், மாடலிங் ஹீரோவாக, பாடிபில்டராக, ஒரு வயதான முதிர்ச்சியடைந்த கூணி குறுகியப்போன பெரியவர் போன்ற கதாபாத்திரம் என்று விதவிதமான ரோல்களில் நடித்து தனது திறமையை காட்டிக் கொண்டிருந்தார்.

தமிழ் சினிமாவில் அதிகப்படியாக வசூல் கொடுத்த படங்களில் ஐ படம் 6ஆவது படமாக கருதப்படுகிறது.

சமூக சேவை

சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக சேவையிலும் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித தீர்வு திட்டத்திற்கான இளைஞர் தூதராக இருக்கிறார். சஞ்சீவானி அறக்கட்டளையின் பிராண்ட் தூதராக இருக்கிறார்.

ஐ படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வரும் படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்து வருகிறது.

10 எண்றதுக்குள்ள, இரு முகன், ஸ்கெட்ச், சாமி ஸ்கொயர், கடாரம் கொண்டான் ஆகிய படங்கள் அந்தளவிற்கு ஒன்றும் வசூல் குவிக்கவில்லை என்றும், திரையரங்குகளில் ஓடவில்லை என்றும் கூறப்படுகிறது.

திரைக்கு வரும் படங்கள்

தற்போது அஞய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா என்ற படத்தில் கிட்டத்தட்ட 10க்கும் அதிகமான ரோல்களில் நடித்து வருகிறார்.

கோப்ரா படத்தைத் தொடர்ந்து துருவ நட்சத்திரம், மகாவீர் கர்ணா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

முக்கிய இயக்குநர்கள்

விக்ரமின் சினிமா வாழ்க்கையில் இயக்குநர் பாலா மற்றும் ஷங்கர் ஆகிய மிக முக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள்.

இந்த நிலையில் விக்ரம் இன்று தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் நியூஸ் வெப்சைட் சார்பாக நாமும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வோம். ஹாப்பி பர்த்டே சியான் விக்ரம் சார்….

SOURCER SIVAKUMAR
Previous articleமொபைல் பேட்டரி அதிக நேரம் நீடிக்க என்ன செய்யலாம்?
Next articleZoom Cloud; வீடியோ கால் ஜும் ஆப் ஆபத்தானதா? உங்கள் மொபைலில் உள்ளதா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here