Home சினிமா கோலிவுட் என்னோட அண்ணா, என்னோட தளபதி: விஜய்க்கு வாழ்த்து கூறிய சினிமா பிரபலங்கள்!

என்னோட அண்ணா, என்னோட தளபதி: விஜய்க்கு வாழ்த்து கூறிய சினிமா பிரபலங்கள்!

298
0
HBD Thalapathy Vijay

Vijay Birthday Today; என்னோட அண்ணா, என்னோட தளபதி: விஜய்க்கு வாழ்த்து கூறிய சினிமா பிரபலங்கள்! விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு என்னோட அண்ணா, என்னோட தளபதி என்றெல்லாம் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வெற்றி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் தளபதி விஜய். ஆனால், என்ன இந்தப் படம் சிறப்புத் தோற்றமாக அமைந்துள்ளது. தொடர்ந்து குடும்பம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு திரைக்கு வந்த நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அவரை ஹீரோவாக்கியதே அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்.

விஜய் நடித்த 64 படங்களில் கிட்டத்தட்ட 15 படங்களில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்திலேயே நடித்துள்ளார். தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது தளபதி66 என்ற படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தளபதி விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்.

அவரது பிறந்தநாளை ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி, கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களை விட விஜய் பிறந்தநாளை சினிமா பிரபலங்கள் சூப்பராக கொண்டாடி வருகின்றனர்.

ஆம், விஜய் உடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு தனக்கு உங்களுடன் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றும், என்னோட அண்ணா, என்னோட தளபதி என்றும், ஹேப்பி பர்த்டே தளபதி என்றும், ஹேப்பி பர்த்டே டியர் தளபதி என்றும் பல்வேறு விதமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Previous articleதளபதி விஜய் பிறந்தநாள்: தாறுமாறாக கொண்டாடும் ரசிகர்கள்!
Next articleஇன்றும் உச்சத்தில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here