Dhanush Family Photo; முதல் முறையாக தனி தனியாக இருக்கிறோம்: தனுஷின் சகோதரி கார்த்திகா வருத்தம்! குடும்பத்தோடு குலதெய்வ கோயிலுக்கு சென்று வந்த தனுஷ் அங்கு குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். தற்போது அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனுஷ் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், திரையரங்குகள் மூடப்பட்டதோடு, சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது.
மேலும், சினிமா பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. எனினும், அவர்கள் கொரோனா விழிப்புணர்வு வீடியோ பதிவிட்டு வந்தனர்.
மேலும், ரசிகர்களுடன் உரையாடுவது, உடற்பயிற்சி செய்வது, யோகா, சமையல், வீட்டைச் சுத்தம் செய்வது என்று தங்களை பிஸியாக வைத்துக் கொண்டனர்.
தனுஷும் தனது டுவிட்டர் பக்கத்தில் விழிப்புணர்வு வீடியோ பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், தனுஷின் சகோதரி கார்த்திகா குடும்பத்தோடு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, அனைவரையும் மிஸ் பண்ணுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து, எனது வாழ்வில் குறைந்தது 2 மாதங்களுக்கு ஒரு முறையாவது நாங்கள் ஒருவரையொருவர் பார்க்காமல் இருந்ததில்லை. எங்களது வாழ்க்கையில், ஒரே நகரத்திலிருந்தும் முதல் முறையாக பிரிந்திருக்கிறோம்.
இது போன்று இதற்கு முன்னதாக பிரிந்திருந்தது இல்லை. மிஸ் பண்ணுனதும் இல்லை. உண்மையான அன்பு மற்றும் குடும்பத்தோடு செலவிடும் நேரம் ஆகியவற்றிற்கு இணையாக இவ்வுலகில் எதுவுமே இல்லை. உங்களை நேசிக்கிறேன். மிக அதிகாமக மிஸ் பண்ணுகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், குடும்பத்தோடு தேனியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்ற தனுஷ், அங்கு குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது.
அந்தப் புகைப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், செல்வராகவன், தனுஷின் சகோதரிகள் விமலகீதா, கார்த்திகா ஆகியோரும் தங்களது குழந்தைகளுடன் அந்த புகைப்படத்தில் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.