Dhanush Yaaradi Nee Mohini; ரகுவரன் நடிப்பில் கடைசியாக வந்த யாரடி நீ மோகினி! நடிகர் ரகுவரன் நடிப்பில் கடைசியாக வந்த யாரடி நீ மோகினி திரைப்படம் சன் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.
யாரடி நீ மோகினி Yaaradi Nee Mohini திரைப்படம் சன் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் Dhanush தனுஷ், ரகுவரன், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி திரைக்கு வந்த படம் யாரடி நீ மோகினி.
தமிழ் ரொமாண்டிக் காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பாடலும் ரசிகர்களை இன்றும் மெய்சிலிர்க்க வைக்கிறது. அதில், குறிப்பாக வென்மேகம் என்ற பாடல் துள்ளல் நடனம் போட வைக்கிறது.
இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே ரகுவரன் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் திடீரென்று உயிரிழந்தார். யாரடி நீ மோகினி அவரது கடைசி படமாக அமைந்துவிட்டது.
இந்த நிலையில், இந்த படம் வெள்யாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில், இன்று யாரடி நீ மோகினி திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனை தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். இதன் காரணமாக ஹலோ டிரெண்டிங்கில் #YNMOnSunTV என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ப்ரியமானவளே, காஞ்சனா 3, ஸ்கெட்ச் ஆகிய படங்கள் இன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. நாளை காலை 10 மணிக்கு தூள், 2.30 மணிக்கு உனக்கும் எனக்கும், 6.30 மணிக்கு வீரம், 9.30 மணிக்கு நானும் ரௌடி தான் ஆகிய படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
வீரம் படம் ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில், தல அஜித் ரசிகர்கள் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Dhanush Yaaradi Nee Mohini movie telecasted on Sun TV Today…