Home சினிமா கோலிவுட் இவருக்கு லாக்டவுனே கிடையாது: மாலத்தீவில் லூட்டியடிக்கும் ஹன்சிகா: விரைவில் Throwback வீடியோ!

இவருக்கு லாக்டவுனே கிடையாது: மாலத்தீவில் லூட்டியடிக்கும் ஹன்சிகா: விரைவில் Throwback வீடியோ!

0
298
Hansika Motwani Throwback Video

Hansika Throwback Video; இவருக்கு லாக்டவுனே கிடையாது: மாலத்தீவில் லூட்டியடிக்கும் ஹன்சிகா: விரைவில் Throwback வீடியோ! ஹன்சிகா மோத்வானி மாலத்தீவில் லூட்டி அடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

ஹன்சிகா மோத்வானி மாலத்தீவில் சுற்றித்திரிந்து லூட்டி அடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் வந்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஆனால், சிறுவயதிலேயே விளம்பர நிகழ்ச்சிகள், சின்னத்திரை நாடகங்களில் நடித்துள்ளார்.

ஹவா என்ற பாலிவுட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு, கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான அல்லு அர்ஜூனின் Desamuduru என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்தார்.

மாப்பிள்ளை படத்தில் அறிமுகமான ஹன்சிகா தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, புலி, அரண்மனை 2, சிங்கம் 3, 100 என்று வரிசையாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மஹா என்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடித்து முடித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்குதல் காரணமாக 6 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வரும் 31 ஆம் தேதி வரையில் இந்த லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதன் விளைவாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலையில், நடிகை ஹன்சிகா மட்டும் ஊரெல்லாம் சுற்றி வருகிறார்.

ஆம், மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள ஹன்சிகா அங்கு லூட்டியடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

முழு வீடியோ வரும் வியாழன் அன்று இரவு 7 மணிக்கு வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லாக்டவுன் நேரத்தில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் ஹன்சிகா தொடங்கியுள்ளார். அதில், தனது வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும், அந்த யூடியூப் சேனல் மூலமாக தனது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here