Home சினிமா கோலிவுட் வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு 2 வேடமா?

வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு 2 வேடமா?

289
0
Suriya Vaadivasal

Suriya Vaadivasal; வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு 2 வேடமா? இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யா 2 கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் காப்பான்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படம் கொரோனா காரணமாக இதுவரை திரைக்கு வரவில்லை. நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனாவால், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும், அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஆதலால், புதிதாக உருவாக்கப்பட்ட குறைந்த பட்ஜெட் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. பொன்மகள் வந்தாள், பென்குயின் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன. இந்தப் படங்களைத் தொடர்ந்து காக்டெய்ல், டேனி, ஆர்கே நகர், லட்சுமி பாம் ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார்.

கொரோனா லாக்டவுன் முற்றிலும் சரியான பிறகு அருவா படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாடிவாசல் படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, வாடிவாசல் படத்தில் சூர்யா 2 கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதுவும், அப்பா, மகன் கதாபாத்திரமாம். இதற்கு முன்னதாக வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா அப்பா, மகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெரினா போராட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ஜல்லிக்கட்டு படத்தில் சூர்யா நடிப்பதால், படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அருவா படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleகருப்பன் நடந்து போனா ஊரே அடங்கி நிக்கும்: காளையுடன் கெத்து காட்டிய சூரி!
Next articleஇவருக்கு லாக்டவுனே கிடையாது: மாலத்தீவில் லூட்டியடிக்கும் ஹன்சிகா: விரைவில் Throwback வீடியோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here