ஆஸ்கார் வென்ற பாராசைட் திரைப்படம் இணைய உரிமை வாங்கிய அமேசான், வருகிற மார்ச் 27ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் தளத்தில் வரவிருக்கும் கொரியன் திரைப்படம்.
2020-ஆம் ஆண்டின் ஆஸ்காரில் நான்கு விருது வாங்கிய கொரியன் திரைப்படம் பாராசைட் (Parasite). சிறந்த படத்திற்கான விருதையும் திரைக்கதைக்கான விருதையும் பெற்று உலக சாதனை படைத்தது.
ஆங்கிலம் அல்லாமல் பிற மொழியில் சிறந்த படம் ஆஸ்கார் வென்ற முதல் திரைப்படம் பாராசைட் ஆகும்.
முதலாளித்துவமும் ஏழை மற்றும் பணக்கார மக்களின் வேறுபாட்டையும் மிக அழுத்தமாக எடுத்துரைக்கும் ஒரு எதார்த்தமான வாழ்வியல் திரைப்படம் இது.
வருகிற மார்ச் 27ஆம் தேதியில் இருந்து அமேசான் பிரைமில் (Amazon Prime) வரப்போகிறது. மேலும் ஹிந்தி மொழியிலும் டப்பிங் செய்து ரிலீஸ் ஆகிறது.