Home சினிமா சூப்பர் ஸ்டாரையும் விட்டு வைக்கலையே.. இந்த கொரோனா?!

சூப்பர் ஸ்டாரையும் விட்டு வைக்கலையே.. இந்த கொரோனா?!

354
0

Super Star Tom Cruise : ஹாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ‘சூப்பர் ஸ்டார்’ டாம் க்ரூஸ் (Super Star Tom Cruise). இவர் படங்களுக்கென உலகளவில் மிகப்பெரிய ரசிகர்  பட்டாளம் இருக்கிறது.

டாம் க்ரூஸ் நடித்து கடைசியாக ரிலீஸான படம் ‘மிஷன் இம்பாஸிபிள் : ஃபால் அவுட்’. தற்போது, ‘ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்’ டாம் க்ரூஸ் கைவசம் ‘டாப் கன் : மாவெரிக்’ மற்றும் ‘மிஷன் இம்பாஸிபிள் 7 & 8’ ஆகிய மூன்று படங்கள் உள்ளது.

இதில் ‘டாப் கன் : மாவெரிக்’ படத்தை பிரபல இயக்குநர் ஜோசப் கோசின்ஸ்கி இயக்கி கொண்டிருக்கிறார்.

இப்படம் 1986-ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான ‘டாப் கன்’ என்ற படத்தின் சீக்குவல் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில், படத்தை ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வருகிற ஜூன் 26-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர்.

தற்போது, கொரோனா வைரஸ் நோய் காரணமாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளதால், இந்த படத்தின் ரிலீஸை டிசம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ டாம் க்ரூஸ் (Super Star Tom Cruise) தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here