Home சினிமா ‘நிஜத்திலும் நான் கர்பம்தான்’ சொன்னது யாரு.

‘நிஜத்திலும் நான் கர்பம்தான்’ சொன்னது யாரு.

222
0
'நிஜத்திலும் நான் கர்பம்தான்' சொன்னது யாரு.

‘நிஜத்திலும் நான் கர்பம்தான்’ சொன்னது யாரு. விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் ஹேமா.

செய்தி வாசிப்பாளராக இருந்த ஹேமா நடிக்கும் ஆர்வத்தில் சீரியல்களில் நடித்து வருகிறார். குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு, சின்னதம்பி முதலிய சீரியல்கள் இவருக்கு நல்ல பெயரை தந்தன.

இவர் வெள்ளித்திரையில் பாயும் புலி, அட்டகத்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சீரியல் சினிமா என பிசியாக உள்ள ஹேமாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா, அந்த சீரியல் கதாபாத்திரத்தின் படி கர்பமாக உள்ளார்.

சமீபத்தில் ஆன்லைன் நேரலை பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஹேமா தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.  அப்போது விஷேசம் ஏதாவது உண்டா என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு வெட்கத்துடன் தான் 5 மாதம் கர்பமாக இருப்பதாக தெரிவித்தார். திருமணமாகி தற்போதைக்கு குழந்தை வேண்டாம் என தள்ளிப்போட்டிருந்தார் ஹேமா.

தற்போது இவரும் இவர் கணவரும் குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவுக்கு வந்ததை அடுத்து தற்போது ஹேமா 5 மாத கர்பமாக உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here