கேஜிஎஃப் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு; மே ஐ கம் இன்
பாகுபலி இரண்டுக்கு பிறகு இந்தியா முழுவதும் பிரபலமாகி இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களால் காத்திருக்கும் படம் பிரசாந்த் நீலின் கேஜிஎஃப் ஆகும்.
கேஜிஎஃப் படத்தில் நடித்து மிக பிரபலமான நடிகர் யாஷ் உடன் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். இது அவருக்கு கன்னடா மொழியில் முதல் திரைப்படமாகும்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் முடிந்த அளவிற்கு படத்தை வேகமாக எடுத்துகொண்டிருக்கிறது படக்குழு.
ஐதராபாத்தில் முக்கியமான ஆக்சன் காட்சிகள் எடுத்து முடித்து விட்டனராம். இனிமே இறுதிகட்ட படப்பிடிப்புகள் சில மட்டுமே மீதம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கேஜிஎப் 2: சோன்பத்ரா தங்கச்சுரங்கம் மர்மமான கதை
இதை வைத்து பார்க்கையில் படப்பிடிப்பு முடியும் நிலையில் இருக்கிறது. என்பது உறுதியாகியுள்ளது. படக்குழுவிடம் இருந்து உறுதியான தேதி கூறப்படவில்லை.
இருந்தாலும் அக்டோபர் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் துர்கா, ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜை வருகிறது வசூலுக்கு நல்லதாக அமையும்.
U will have an update this month but not abt the teaser😁 #KGFChapter2
— Karthik Gowda (@Karthik1423) March 6, 2020
மேலும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை மிகவும் தீவிரமாகவும் நடந்து வருகிறது. இந்த நிலையில் எக்ஸ்கூட்டிவ் ப்ரொடியூசர் கார்த்திக் கௌடா செய்த ட்வீடில் இந்த மாதம் இறுதியில் நல்ல அப்டேட் காத்துக்கொண்டு இருக்கிறது என கூறியுள்ளார்.