Alia Bhatt : பாலிவுட்டில் 2012-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஸ்டுடண்ட் ஆஃப் தி இயர்’. இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அலியா பட் (Alia Bhatt). இதனைத் தொடர்ந்து ‘ஹைவே, 2 ஸ்டேட்ஸ், டியர் ஜிந்தகி’ போன்ற பல ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார்.
கடைசியாக அலியா பட் (Alia Bhatt) நடிப்பில் ரிலீஸான படம் ‘Kalank’. தற்போது, அலியா பட்டின் கால்ஷீட் டைரியில் நான்கு படங்கள் உள்ளது.
இதில் ‘RRR’ (இரத்தம் ரணம் ரௌத்திரம்) என்ற படத்தை பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி கொண்டிருக்கிறார். இப்படம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
இந்த படத்தில் ‘யங் டைகர்’ ஜூனியர் என்.டி.ஆர், ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் என இரண்டு முன்னணி ஹீரோக்கள் சேர்ந்து நடித்து வருகிறார்கள். ராம் சரணுக்கு ஜோடியாக அலியா பட் (Alia Bhatt) நடிக்கவுள்ளார்.
மேலும், கதையின் மிக முக்கிய ரோல்களில் அஜய் தேவ்கன், அலிசன் டூடி, ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
படத்தை 2021-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
படத்தின் ஷூட்டிங் 80% நிறைவடைந்து விட்டதாம். நடிகை அலியா பட் (Alia Bhatt) வருகிற மே மாதம் இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர் படப்பிடிப்பில் இணைந்ததும் முதலில் பாடல் காட்சியை படமாக்க படக்குழு ப்ளான் செய்துள்ளதாம்.