HBD Rashmika Mandanna : கன்னட சினிமாவில் 2016-யில் ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படம் ரிலீஸானது. இதில் ஹீரோவாக ரக்ஷித் ஷெட்டி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்திருந்தார். இது தான் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக அறிமுகமான முதல் படமாம்.
இதனைத் தொடர்ந்து ‘அஞ்சனி புத்ரா, சமக்’ என 2 கன்னட திரைப்படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்தார்.
அதன் பிறகு தெலுங்கு திரையுலகில் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) என்ட்ரியானார். ‘சலோ, கீதா கோவிந்தம், தேவதாஸ்’ என அடுத்தடுத்து மூன்று தெலுங்கு படங்களில் நடித்தார்.
இதில் ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்திருந்தார். இப்படத்தில் வந்த ‘இன்கேம் இன்கேம் காவாலே’ எனும் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, அப்பாடல் ராஷ்மிகா மந்தனாவிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது.
கடைசியாக ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடிப்பில் ரிலீஸான தெலுங்கு படம் ‘பீஷ்மா’. இதில் ஹீரோவாக நித்தின் நடித்திருந்தார். தற்போது, ராஷ்மிகா மந்தனா கைவசம் மூன்று படங்கள் உள்ளது.
நாளை (ஏப்ரல் 5-ஆம் தேதி) ராஷ்மிகா மந்தனாவின் (Rashmika Mandanna) பிறந்த நாளாம். அவரின் Comman Dp-யை இன்று மாலை 6 மணிக்கு பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.