Rashmika Mandanna Birthday: ராஷ்மிகா மந்தனா யாருப்பா அது எனக் கேட்பவர் கூட உண்டு. கீதா கோவிந்தம் (Geetha Govindam) தெரியுமா எனக் கேட்டால் சட்டென சொல்லிவிடும் தமிழக இளைஞர் படை.
தெலுங்கு நடிகை?
ராஷ்மிகா தெலுங்கு நடிகையாக பிரபலம் அடைந்து இருக்கலாம்! ஆனால், அவர் தெலுங்கு நடிகை கிடையாது. அவர் முதலில் நடித்த படம் கன்னட மொழி படம். அவர் பிறந்த மாநிலமும் கர்நாடகா.
நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் ரஜினி (rajini) எப்படி கர்நாடகாவில் கண்டெக்ட்டராக வேலை செய்து, தமிழகத்தில் நுழைந்து சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தாரோ? அதேபோல் ராஷ்மிகாவுக்கும் ஒரு பிளாஷ் பேக் உள்ளது.
ரஷ்மிகா முதலில் நடிகையாக அறிமுகமான படம் ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட மொழி திரைப்படம். அஞ்சனி புத்ரா, சமக் என மூன்று படங்கள் நடித்தும் பெரிய அளவில் புகழ் கிடைக்கவில்லை.
தெலுங்கு திரை உலகம்
அதன் பிறகு தெலுங்கு திரை உலகு இவரின் அழகை எப்படியோ கண்டு பிடித்து ஆந்திரா பக்கம் தூக்கிச் சென்றனர். சாலோ என்ற படத்தில் அறிமுகமானார்.
இதில் ஓரளவு தன்னுடைய அழகால் தெலுங்கு ரசிர்கர்களை கவர்ந்தார். இரண்டாவது படம் தான் அவரே எதிர்பாராத திருப்பு முனை.
அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்தார். கீதா கோவிந்தம் (Geetha Govindam) படம். பேருக்கு ஏற்றார் போல் கோவக்காரா பொண்ணு.
அதில் இருக்குதே ஒரு பாட்டு தக்கச்சிமி.. தக்கச்சிமி.. என பரத நாட்டியம் ஸ்டைலில் துவங்கும் இன்கேம் இன்கேம் காவாலே! பாடல்.
பட்டிதொட்டி எங்கு பரவி ரசிகர்களை கிறங்கடித்தது. விஜய் தேவரகொண்டாவை மறந்து ரஷ்மிகா இதய ராணியாக மாறினார் பலருக்கு.
Rashmika Mandanna Photos கீத கோவிந்தம் படம் zee5 ல இருக்கு பாருங்க
பிறகு இதைவிட ஒரு நடிகைக்கு என்ன வேண்டும். ஓவர் நைட்டில் ஒபாமா ஆனா கதை தான். தெனிந்தியா முழுவதும் ரஷ்மிகாவின் கொடி பறக்கத்துவங்கி விட்டது.
தமிழில் எப்போது நேரடி படத்தில் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் கொஞ்சம் கிறங்கித்தான் உள்ளனர். ப்ரேமம் வந்த போது சாய் பல்லவி மேல் இருந்த அதே கிறக்கம் ரஷ்மிகா பக்கம் வந்துள்ளது.
அம்மணி கொஞ்சம் ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு பக்கம் வந்துட்டு போங்க.. ரசிகர்கள் காத்துக்கொண்டு உள்ளனர்.
Rashmika Mandanna Birthday Date (5 April 1996) (Age 23)
இனிக்கி என்ன ராஷ்மிகாவ பத்தி புகழ்ந்து எழுதிட்டு இருக்கன்னு கேக்குறீங்களா இன்னிக்கு அவங்களுக்கு பிறந்த நாள். முதல்ல டிவிட்டர்ல ஒரு விஷ் பண்ணிட்டு வாங்க.
HBD Rashmika Mandanna கொஞ்சம் தமிழ் சினிமா பக்கம் வந்துட்டு போங்க…