Super Star Mahesh Babu : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு (Super Star Mahesh Babu). இவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழில் ‘ஸ்பைடர்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.
கடைசியாக ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு (Super Star Mahesh Babu) நடித்து டோலிவுட்டில் வெளியான படம் ‘சரிலேறு நீகேவ்வறு’. ஆக்ஷன் ஜானர் படமான இதனை பிரபல இயக்குநர் அணில் ரவிபுடி இயக்கியிருந்தார்.
இதில் ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவிற்கு (Super Star Mahesh Babu)ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி, கோடிக் கணக்கில் வசூல் மழை பொழிந்தது. ‘சரிலேறு நீகேவ்வறு’ படத்துக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு (Super Star Mahesh Babu) நடிக்கவிருக்கும் புதிய படத்தை பிரபல இயக்குநர் பரசுராம் இயக்கவுள்ளார்.
இந்த படம் ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவின் (Super Star Mahesh Babu) கேரியரில் 27-வது படமாம். இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.
தற்போது, கொரோனா வைரஸ் நோய் காரணமாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. மேலும், படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு (Super Star Mahesh Babu) ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும், லாக் டவுன் என்பதால் ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு (Super Star Mahesh Babu) தனது மகள் சித்தாராவுடன் இணைந்து ‘ஸ்டூவர்ட் லிட்டில்’ என்ற படத்தை பார்த்து ரசித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
Father & Daughter exclusive! #StuartLittle❤️ Streaming now! #Lockdown mode💕 Can’t wait to watch part 2 tomorrow😊 Let's all find our little something to do at home… loved ones will pull us all through this😍#StayHomeStaySafe🏠🙏 pic.twitter.com/lNuZfxwF3f
— Mahesh Babu (@urstrulyMahesh) April 3, 2020