போர்ப்ஸ் 30 பட்டியலில் இடம் பிடித்த விஜய் தேவரகொண்டா
2011-ஆம் ஆண்டு நுவ்விளா என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. 2017-ஆம் ஆண்டு வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் மிகப்பிரபலமானார்.
அர்ஜூன் ரெட்டி திரைப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, தமிழிலும் ஹிந்தியிலும் அப்படத்தை ரீமேக் செய்துள்ளனர்.
அதன்பிறகு வெளிவந்த கீதா கோவிந்தம் வசூலை அள்ளியது. சமீபத்தில் டோலிவுட்டில் அதிக வசூல் செய்த படம் இதுவாகும்.
2019-ஆம் ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட 30 நபர்கள் கொண்ட பட்டியலில் இடம் பெற்ற ஒரே நடிகர் விஜய் தேவரகொண்டா மட்டுமே.
யூடியூப்பர் பிரஜக்தா கோலி, கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தடகள வீராங்கனை ஹிமா தாஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
சமீபத்தில் விஜய் தேவரகொண்டா அளித்த பேட்டியில் ‘எனக்கு 25 வயது இருக்கும் பொழுது 500 ரூபாய் குறைந்தபட்சத் தொகையை, என்னுடைய பேங்க் அக்கவுண்டில் பராமரிக்கவில்லை. இதனால் ஆந்திரா பேங்க் என்னுடைய அக்கவுண்டை லாக் செய்தது.
என்னுடைய அப்பா 30 வயதிற்குள் செட்டில்லாகிவிட வேண்டும். அப்போது தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று என்னிடம் கூறினார் என அந்தப்பேட்டியில் தெரிவித்தார்.
அவர் கூறிய நான்கு வருடம் கழித்து இந்தியாவின் போர்ப்ஸ் 100, போர்ப்ஸ் 30 பேர் கொண்ட பட்டியலில் விஜய் தேவரகொண்டா இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரௌடி என்ற பெயரால் அவருடைய அனைத்து ரசிகர்களாலும் அழைக்கப்படுகிறார். மேலும் ரௌடி என்ற பெயரில் ஒரு வலைதளம் ஆரம்பித்து அதில் ரசிகர்களுடன் தொடர்பிலும் உள்ளார்.
தற்பொழுது டியர் காமரேட் படத்தில் கம்மியுனிசத்தை பரப்பும் மாணவன் ஆக நடித்துக்கொண்டு வருகிறார்.