Vijay IT Raid; மாஸ்டர் படப்பிடிப்பு முடிந்து விஜய் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில், விஜய் வீட்டிற்கு மீண்டும் வருமான வரித்துறையினர் சென்றுள்ளனர்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்ட படம் பிகில் (Bigil).
இப்படத்தின் சம்பளத்தில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாக, விஜய் வீடு, இப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மாதம் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் முடிவில் அன்புச்செழியன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.77 கோடி ரூபாய் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நெய்வேலியில் நடந்து வந்த மாஸ்டர் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த விஜய்யை வருமான வரித்துறையினர் தங்களது காரில் அழைத்து வந்து கிட்டத்தட்ட 2 நாட்கள் விஜய் மற்றும் அவரது மனைவி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஆனால், ரொக்கமாக எந்தப் பணமும் இல்லை என்றும் ஆவணங்கள் எதுவும் இல்லைஎ ன்று கூறி வந்தவழியில் அவர்கள் திரும்பிச் சென்றனர்.
இதையடுத்து விஜய் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிக்கப்பட்ட நிலையில், வரும் 15 ஆம் தேதி மாஸ்டர் இசை வெளியீடு நடக்க இருக்கிறது.
இதற்கு முன்னதாக விஜய் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில், விஜய்யின் பண்ணை வீட்டிற்கு திடீரென்று வருமான வரித்துறையினர் சென்றுள்ளனர்.
ஆனால், சோதனை மேற்கொள்ள செல்லவில்லை என்றும், மாறாக கடந்த ஆண்டு நடந்த சோதனையின் போது சில அறை, டிராயர்கள், லாக்கர்கள் அடைத்து ஆகியவற்றிற்கு சீல் வைக்கப்பட்டிருந்தது.
சீல் அகற்றும் பணிக்காக விஜய் வீட்டிற்கு சென்றுள்ளோம். தற்போது சீல் அகற்றும் பணி நடந்து வருகிறது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#ITaction #Vijay
Not a raid, removing Prohibition orders. அதாவது சோதனை/ ஆய்வு அல்ல; கடந்த மாதம் நடந்த சோதனையின் போது சில அறை, டிராயர்கள், லாக்கர்கள் அடைத்து சீல் வைக்கப்பட்டிருந்தது. சீல் அகற்றும் பணி தற்போது நடந்துவருகிறது: வருமானவரித் துறை@News18TamilNadu @actorvijay pic.twitter.com/OmUdhUUNQA— Mahalingam Ponnusamy (@mahajournalist) March 12, 2020
https://platform.twitter.com/widgets.js