Home சினிமா கோலிவுட் மருமகனை மடியில் வைத்து மொட்டையடித்து காது குத்திய தனுஷ்!

மருமகனை மடியில் வைத்து மொட்டையடித்து காது குத்திய தனுஷ்!

874
0
Dhanush Tirupati

Dhanush; மருமகனை தனது மடியில் அமரவைத்து நடிகர் தனுஷ் மொட்டையடித்து காது குத்தி தனது கடமையை நிறைவேற்றியுள்ளார்.

குடும்பத்தோடு திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ள தனுஷ் தனது சகோதரி (Karthika Devi) மகனை மடியில் வைத்து மொட்டை அடித்து காது குத்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் தற்போது ஜகமே தந்திரம் (Jagame Thandhiram) படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து கர்ணன் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

கடந்த வாரம் அத்ராகி ரே என்ற ஹிந்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த நிலையில், தற்போது ஷூட்டில் இடைவெளியில் இருக்கும் தனுஷ், தனது குடும்பம், சகோதரனும், இயக்குநருமான செல்வராகவன், சகோதரியும் மருத்துவருமான கார்த்திகா ஆகியோருடன் குடும்பத்தோடு திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளார்.

அங்கு, தனது சகோதரியின் மகனுக்கு தனது மடியில் வைத்து மொட்டை அடித்து காது குத்தி தனது தாய்மாமன் கடமையை நிறைவேற்றியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கார்த்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது சகோதரர்களைப் பற்றி கூறி பெருமைப்பட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது குழந்தைகளின் மாமாக்களின் அன்புக்கு முன்பு அவர்கள் எப்போதும் அதிர்ஷ்டாலிகள்தான்.

இதற்காக கிட்டத்தட்ட 2,3 வருடங்கள் காத்திருந்தேன். எனது மகனின் தலைமுடி என்னை விட அதிகளவில் வளர்ந்துவிட்டது.

ஆனால், எல்லாமே நல்லது தான். திருமலையில் குடும்பத்தோடு அழகான திவ்ய தர்ஷனம் இருந்தது.

சாமி வெங்கடேஸ்வரா கொடுத்த அதிர்வலைகள் மற்றும் கண்ணீர் ஆகியவற்றிற்கு முன்பு எதுவும் பெரிதாக ஒன்றுமில்லை. என்னவொரு பொன்னான நாள்.

எனது சகோதர்கள் அவர்களது கடமையைச் செய்ய தவறவில்லை. சகோதரர்களின் கடமை முற்றிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சத்ரியன் அதிர்ஷ்டசாலி. ஓம் நமோ நாராயணா என்று பதிவிட்டுள்ளார்.

//www.instagram.com/embed.js

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here