மனிதர்கள் என்னதான் வெளிநாட்டில் வேலை பார்த்தாலும் மனசுல ஒரு ஓரமாக சொந்த ஊருக்கு போக மாட்டோமா? என்று ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
என்றாவது ஒரு நாள் பிறந்த இடத்தை பார்க்க வேண்டும் என்ற ஏக்கமும் இருக்கும். இதைபோல தான் மற்ற உயிரினங்களுக்கும் மனதிலும் இருக்கும் போல.
ஆமை செய்த பயணம்
ஆம் ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு ஒரு ஆமை பயணித்து ஆச்சரியத்தை ஏற்படுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் நகரில் 1997 ஆம் ஆண்டு ஜப்பானியர் மீன்பிடி படகு ஒன்றில் குட்டி கடல் ஆமை ஒன்று காயத்துடன் சிக்கியுள்ளது.
இதை பார்த்த அந்த ஜப்பானியர் ஆமை காயம் பட்டதை கண்டு, அதற்கு முதலுதவி செய்து கடல்வாழ் உயிரினங்கள் பராமரிப்பு மையத்திடம் உதவி கேட்டுள்ளார்.
அவர்கள் வந்து காயம்பட்ட ஆமைக்கு சிகிச்சை அளித்துள்ளனர். தினமும் அதற்கு பயிற்சி, நீந்தும் திறமை, மருந்துகள் கொடுத்து வந்துள்ளனர்.
இப்படி அவர்களின் பராமரிப்பில் இருபது வருடங்கள் வளர்ந்த இந்த ஆமை. ஜோசி என்று பெயர் சூட்டப்பட்டு, 2 கிலோவில் இருந்து 180 கிலோ அளவிற்கு வளர்ந்துள்ளது.
அந்த ஆமை நன்றாக நீந்தி வந்ததால் அதை கடலிலே விடும் முடிவிற்கு வந்தனர் பராமரிப்பு மையத்தினர்.
ஆதலால் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி ஆப்பிரிக்கா கடலில் வழி அனுப்பி வைத்துள்ளனர்.
அவர்களிடம் விடை பெற்ற ஆமை 26 மாதங்கள் பயணம் செய்து தன்னுடைய பிறந்த இடத்திற்கு சென்று வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடல் ஆமைக்கு இயற்கையாகவே பிறந்த இடத்தை உணரும் தன்மை உள்ளது என விஞ்ஞானிகள் கூறுவதை இந்த ஆமை நிருப்பித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 47 கிலோமீட்டர் பயணித்த இந்த ஆமை, தான் பிறந்த இடமான மேற்கு ஆஸ்திரேலியா கடல் பகுதிக்கு 26 மாதமாக பயணித்து சுமார் 37000 கி.மீ பயணித்துள்ளது.
சாட்டிலைட் மூலமாக ஆய்வாளர்களும், பராமரிப்பு மையத்தினரும் தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.
இந்த ஆமை சென்ற இடம் அதாவது ஆமை பிறந்த இடம் ஆஸ்திரேலியாவில் வசதியனாவர்கள் தேன் நிலவுக்கு செல்லும் இடமாகும்.
தனக்கு பிடித்த மான இணையை யோசி இந்நேரம் தேடி கண்டுபிடித்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
கண்காணிக்கப்பட்ட உயிரினத்திலே அதிக பயணம் சென்றது நம்ம யோசி ஆமை தான் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.