Kavin; பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கவின், பிகில் படத்தின் மூலம் பிரபலமான நடிகை அம்ரிதா ஐயருடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்.
கவின், அம்ரிதா ஐயர் நடிப்பில் புதிய படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் வேட்டையனாக வந்தவர் நடிகர் கவின் (Bigg Boss Kavin). தொடர்ந்து சத்ரியன் படத்தில் துணை நடிகராக நடித்தார்.
இதையடுத்து, நட்புனா என்னானு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். எனினும், அப்படி ஒன்றும் வரவேற்பு இல்லை.
இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 (Bigg Boss 3 Kavin) நிகழ்ச்சியின் மூலம் பங்கேற்று, தனக்கென்று ஆர்மி உருவாகும் அளவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான், புதுமுக இயக்குநர் வினீத் இயக்கத்தில் ஏகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்தப் படத்திற்கு லிஃப்ட் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் விஜய்யின் பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக நடித்த அம்ரிதா ஐயர் (Bigil Actress Amritha Aiyer) ஹீரோயினாக நடிக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (Kavin – Amritha Aiyer) போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க ஹாரர் த்ரில்ல கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. இதில், கவின், அம்ரிதா இருவரும் ஐடி கம்பெனியில் வேலைபார்ப்பவர்களாக நடிக்கின்றனர்.