Home சினிமா கோலிவுட் சுருளி He is coming soon: ஜகமே தந்திரம் அப்டேட்!

சுருளி He is coming soon: ஜகமே தந்திரம் அப்டேட்!

317
0
Jagame Thandhiram Update

Jagame Thandhiram; ஜகமே தந்திரம்  படம் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் (Jagame Thandhiram) படம் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான தனுஷ், காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுக்கோட்டை, யாரடி நீ மோகினி, மாரி, மாரி 2 ஆகிய படங்களில் வரிசையாக நடித்துள்ளார்.

அண்மையில், அசுரன், பட்டாஸ் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், தற்போது ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் உடன் இணைந்து சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெட்சுமி, கலையரசன், சின்னி ஜெயந்த் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் முக்கியமான அறிவிப்பு ஒன்றை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சுருளி He is coming soon என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அது டீசரா? இல்லை டிரைலரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலர் அது தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர் என்றும், அவரது அடுத்த போஸ்டர் வெளியாக வாய்ப்பிருக்கிறது என்றும் கூறி வருகின்றனர்.

எனினும், ஜகமே தந்திரம் வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டும், தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டும் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அன்றைய தேதியில், ஜெயம் ரவியின் பூமி, சூர்யாவின் சூரரைப் போற்று, விஷாலின் சக்ரா ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleகோவையில் பெ.குண்டு வீச்சு; டெல்லியாக மாறிவிட்டதா?
Next articleRashmika Mandanna Photos; ரஷ்மிகா மந்தானா போட்டோஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here