Home சினிமா கோலிவுட் தெலுங்கு வெர்ஷனை கேட்ட ரசிகர்கள்: டுவிட்டரில் டிரெண்டாகும் கத்தி!

தெலுங்கு வெர்ஷனை கேட்ட ரசிகர்கள்: டுவிட்டரில் டிரெண்டாகும் கத்தி!

278
0

கத்தி விஜய் படத்தின் தெலுங்கு வெர்ஷன் படம் இன்னும் வெளிவராததால், ரசிகர்கள் யூடியூப்பில் அல்லது டிஜிட்டல் இணையதளத்தில் வெளியிடும்படி கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கத்தி படத்தின் தெலுங்கு வெர்ஷனை வெளியிடக்கோரி ரசிகர்கள் கத்தி ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி திரைக்கு வந்த படம் கத்தி.

ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தை இயக்கினார். அனிருத் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் இது இரண்டாவது படம். விவசாயிகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கத்தி படத்தில் விஜய் ஜீவானந்தம், கதிரேசன் என்று இருவேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

ரசிகர்களிடையே நல்ல விமர்சனம் பெற்ற இப்படம் தெலுங்கில் கைதி நம்பர் 150 என்ற டைட்டிலிலும், ஹிந்தியில் காக்கி அவுர் கில்லாடி என்ற டைட்டிலிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தெலுங்கில் திரைக்கு வரயிருந்த கத்தி படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. எனினும், 2017 ஆம் ஆண்டு கத்தி தெலுங்கு ரீமேக் திரைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தெலுங்கில் திரைக்கு வந்த கத்தி படத்தை யூடியூப்பில் அல்லது டிஜிட்டல் இணையதளத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இதற்காக கத்தி விஜய் படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திற்கும், தெலுங்கு சினிமா தயாரிப்பாளருமான தாகூர் மதுவிற்கும் தெலுங்கு படத்தை டிஜிட்டல் இணையதளத்தில் வெளியிட வேண்டுகோள் வைத்துள்ளனர்.

தெலுங்கு கத்தி இசையும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக கத்தி ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

Previous articleAi Fen: சீனாவின் தில்லாலங்கடியை அம்பலப்படுத்திய மருத்துவர்
Next articleஜெயலலிதா இன்று நேரில் வந்து ஆணையிட்டார்? சட்டென எழுந்த பழனிசாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here