விஜய்சேதுபதி பிறந்தநாள்: ரசிகனை ரசிக்கும் நடிகன் விஜய் சேதுபதி பிறந்த தினம் இன்று.
பக்கத்து வீட்டு மனிதர் போலவோ, நாம் எப்போதோ பார்த்த மனிதர் போலவோ தோற்றமும் , இயல்பான பேச்சு வழக்கையும் கொண்டவர் விஜய் சேதுபதி.
சூப்பர் டீலக்ஸ் படம் சென்ற வருடத்தின் சிறந்த படம்.
தனது ரசிகர்களுக்கு அதிகமாக முத்தம் கொடுத்த நடிகன் யாரென்றால் நிச்சயமாக அது விஜய்சேதுபதியாகத்தான் இருக்க முடியும்.
ஆம்! படத்தில் தன்னுடன் நடிக்கும் நடிகைக்கு கூட அவ்வளவு முத்தம் கொடுத்திருக்கமாட்டார். தன்னை ரசிக்கும் ரசிகனை இவர் அவ்வளவு ரசிக்கிறார் .
படங்களைத்தாண்டி பொது இடங்களில் பேசுவதில் தன் பேச்சை தெளிவாக வெளிச்சொல்பவர்.
ஆனால் அவை எதுவுமே மேடைப்பேச்சுக்காக பேசுபவையாக இருக்காது. உண்மையில் நினைத்ததை சொல்வதாகவே இருக்கும்.
சக நடிகர்களையும் பெரும் கணிவுடனும் அன்புடனும் அணுகுவார் என்று பல பிரபலங்கள் கூறியுள்ளனர்.
உச்ச நடிகர்களுடன் நடிப்பு
தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்குலக மெகாஸ்டார் சீரஞ்சிவி, தற்போது தளபதி விஜய், பாலிவுட் நடிகர் அமிர்கான் என உச்ச நடிகர்களுடன் இணைந்து நடிப்பதெல்லாம் விஜய்சேதுபதிக்கே சாத்தியமான ஒன்று.
30 வயதென்ற காலக்கட்டத்தில் திரைத்துறையில் பிராகசிக்க ஆரம்பிப்பதெல்லாம் அவ்வளவு எளிதனா விஷயமல்ல அதை சாதித்து காட்டியவர் விஜய்சேதுபதி.
திரைத்துறையில் பல காலமாக சிறு சிறு காதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். உதாரணமாக புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம்.
சிலபல நடிகர்கள் தனது தோற்றத்தை படத்தை தவிர்த்து வெளியில் காட்டும்போது முடிந்த அளவிற்கு அழகை கூட்டியும் ஸ்டைலாக இருக்க வேண்டுமெனவும் மெனக்கெடுவார்கள்.
ஆனால் அப்படியொரு எந்த மெனக்கெடலுமின்றி இயல்பாக சிம்பிளாக தோற்றமளிப்பார். அது எவ்வளவு பெரிய நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி.
ஏன் இப்படி வருகிறீர்கள் என்று கேள்வி கேட்டால்?
“எனக்கு இப்படியான உடைகளும் காலணிகளும்தான் சவுகரியமாக இருக்கும். அதனால்தான் நான் இப்படி வருகிறேன் “
என்று எளிமையான, உண்மையான விளக்கத்தையே கொடுப்பார்.
பார்வதியை கவர்ந்த சேதுபதி
இடையில் நடைபெற்ற Flim Companion இன்டர்வீயு ஒன்றில் ரன்வீர் சிங் , தீபிகா படுகோனே , விஜய் தேவர்கொண்டா ஆகியோருடன் தமிழ் திரை உலகம் சார்பாக விஜய் சேதுபதி கலந்துகொண்டார்.
அங்கிருந்தவர்கள் இவரை பாராட்டியது அழகாக இருந்தது. மேலும் அந்த இடத்தில் இருந்த மலையாள நடிகை பார்வதி அவர்கள் விஜய்சேதுபதியுடன் நடிக்க எனக்கு விருப்பம் இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சன் டிவியில் அவர் செய்த நிகழ்ச்சியாகட்டும், தனது ரசிகர் மன்றம் மூலம் செய்து வரும் நற்பணிகளாகட்டும், பொதுவிடத்தில் பதிவேற்றும் கருத்துகளாகட்டும்.
அனைத்துமே இவரை நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்று நம்மால் சொல்லக்கூடிய அளவிற்கே இருக்கிறது. அவர் பேச்சிற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே .
விஜய்சேதுபதி பிறந்தநாள்
இக்கட்டுரை கூட அவரின் படங்களை பற்றியோ நடிப்பை பற்றியோ பெரிதும் பேசாமல் இருப்பதற்கான காரணம் ஒன்றே! அவர் நல்ல நடிகன் என்பதற்காக மட்டுமல்ல நல்ல மனிதனாகவும் கொண்டாடப்படுகிறார்.
விஜய் சேதுபதி பிறந்த தினம் 16 ஜனவரி, இன்னமும் கொண்டாடப்பட வேண்டும் என்பதே அக்காரணம்.
ரசிகனை ரசிக்கும் தலைவனும்
மக்கள் செல்வனுமாகிய
விஜய் சேதுபதி அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !