ஹலோவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக் 1MonthForVijayBdayBash! வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அதற்காக இன்னும் ஒரு மாதம் இருப்பதை குறிப்பிட்டு 1MonthForVijayBdayBash என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
ஹலோவில் 1MonthForVijayBdayBash என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம் தளபதி விஜய். உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஆண்டுதோறும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அந்த வகையில், வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.
விஜய்யின் பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில், ஹலோவில், 1MonthForVijayBdayBash என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
மேலும், இந்த ஹேஷ்டேக்குடன் VijayFansRulingSocialMedia, Vijay Always no 1 ஆகிய ஹேஷ்டேக்குகளும் டிரெண்டாகி வருகிறது.
மேலும், இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி விஜய் பற்றியும், அவர் நடித்த கதாபாத்திரங்கள் பற்றியும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக, மாஸ்டர் திரைக்கு வரவில்லை.
வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் டிரைலர் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்தப் படத்தில் நடித்த நடிகர் அர்ஜூன் தாஸ், மாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்ததாகவும், இத்தனை நாட்கள் காத்திருப்பிற்கு நல்லா மாஸாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.