Home சினிமா கோலிவுட் 4ஆவது முறையாக பெயரை மாற்றிய நடிகை அதிதி மேனன்: இந்த பேரு ஒர்க் அவுட் ஆகுமா?

4ஆவது முறையாக பெயரை மாற்றிய நடிகை அதிதி மேனன்: இந்த பேரு ஒர்க் அவுட் ஆகுமா?

274
0
Aditi Menon Name Change

Aditi Menon Name Change; 4ஆவது முறையாக பெயரை மாற்றிய நடிகை அதிதி மேனன்: இந்த பேரு ஒர்க் அவுட் ஆகுமா? பட்டதாரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அதிதி மேனன் தனது பெயரை 4 ஆவது முறையாக மாற்றியுள்ளார்.

அதிதி மேனன் தனது பெயரை 4 ஆவது முறையாக மாற்றியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த அதிதி மேனன் அவரது இயற்பெயரான சாய்னா சந்தோஷ் என்ற பெயரில் மலையாள தொலைக்காட்சியில் சீரியல் வில்லியாக நடித்து வந்தார். ஆனால், அங்கு பிரச்சனை ஏற்படவே, தமிழ் பக்கம் திரும்பினார்.

தமிழ் சினிமாவில் நெடுநால்வாடை என்ற படத்தில் ஆதிரா சந்தோஷ் என்ற பெயரில் அறிமுகமானார். ஆனால், இந்தப் படத்தின் இயக்குநருக்கும், ஆதிரா சந்தோஷிற்கும் பிரச்சனை ஏற்படவே படத்திலிருந்து விலகினார்.

அதன் பின்னர் தான், பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தார். இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அபி சரவணன் உடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு தனியாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆனால், சினிமாவில் சாதிப்பதற்கு முன்னதாக தனக்கு திருமணம் நடந்தது தெரியவந்தால் எங்கு சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால், தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை அதிதி மேனன் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக நடிகர் அபி சரவணன் புகார் அளித்தார். ஆனால், நான் அவரை காதலித்தேனே தவிர திருமணம் செய்யவில்லை என்று அதிதி மேனன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அபி சரவணன் மற்றும் அதிதி மேனன் திருமண விவாகரத்து வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

காதல் திருமண வாழ்க்கை தோல்வியடைந்த போதிலும் நடிகர் அபி சரவணன் தொடர்ந்து தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்திக் கொண்டார்.

இந்த நிலையில், தான் நடிகை அதிதி மேனன் தனக்கு ஒன்றுமே நடக்காதது போன்று தனது பெயரை மாற்றி மலையாள சினிமாவில் நடித்து வருகிறார்.

ஆம், 4ஆவது முறையாக தனது பெயரை மிர்னா மேனன் என்று மாற்றியுள்ளார். இந்த பெயரில் தான் மோகன் லால் நடிப்பில் உருவாகி வரும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் சந்தனதேவன் மற்றும் சந்தனதேவன் 2 ஆகிய இரு படங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று தெரிகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleபழம்பெரும் நடிகையின் மகன் தூக்கிட்டு தற்கொலை: திரையுலகினர் அதிர்ச்சி!
Next articleஹலோவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக் 1MonthForVijayBdayBash!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here