18 years of dhanushism: தனுஷ் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து 18 வருடங்கள் ஆகிவிட்டது. அனிருத் கொடுத்த ரணத்தில் இருந்து தனுஷை மீட்டவர் யுவன் சங்கர் ராஜா. yuvan special
ராஜாவின் மகன்கள்
இளையராஜாவின் மகன் யுவன், கஸ்தூரி ராஜாவின் மகன்களுடன் கூட்டணி சேர்ந்தார். அன்று முதல் செல்வாவின் ஆஸ்தான மியூசிக் டைரக்டர் யார்? என்றால்.. அது யுவன் தான்.
“துள்ளுவதோ இளமை” பெயர் மட்டும் துள்ளவில்லை யுவனின் இசையும், செல்வாவின் திரைக்கதையும் இளசுகளின் நாடி நரம்புகளை துள்ளவைத்தது.
ஒரு பள்ளி நண்பர்கள் வெளியில் வந்தால் என்ன நடக்கும் என 2020-ல் இன்றும் இயக்குனர்கள் பயன்படுத்தும் காட்சியமைப்புகளை அப்போதே செல்வா தன் படத்தில் வைத்தார்.
இன்றும் அந்தப் படத்தைப் பார்த்தால் பெருசுகள் கூட இளசுகளாக மாறிவிடுவர். நெருப்பு கூத்தடிக்குது பாடல் அந்த நேரத்தில் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. அதை முணுமுணுக்காத வாலிபர்களே இல்லை எனக் கூறலாம்.
செல்வாவின் ஆஸ்தான மியூசிக் டைரக்டராக யுவன் மாறினார். இருவருக்குமே ஏனோ தமிழ் சினிமா கரடுமுரடான பாதைகளை மட்டுமே கட்டி வருகிறது.
தனுஷிசம் (dhanushism)
ஆனால் தனுஷ் போகும் பாதையோ சிவப்பு கம்பளம் கொடுத்து ஆரவராமாக வரவேற்கும் பாதை. தனுஷ்-அனிருத் கூட்டணி வேறு ஒரு பரிணாமத்தை நோக்கி சென்றது.
யுவன் தடுமாறிய நேரம் அது. தனுஷ், மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் 3 படத்தில் நடித்தார். ரஜினி உறவினர் என்ற அடிப்படையில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார்.
தனுஷ் எழுதிய ஒய் திஸ் கொலைவெறி என்ற வரிகள் அனிருத் இசையில் பாடலாக மாறியது. இந்த ட்ரெண்ட் தமிழ் சினிமாவிற்கு புதிது.
படம் வெளிவரும் முன்பே ஒய் திஸ் கொலவெறி பாடல் மெல்ல மெல்ல கோடம்பாக்கத்தில் இருந்து பரவி, டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என விரிந்தது.
யூடியூப் தளத்தில் புதிய சரித்திரத்தையே படைத்தது. உலக அளவில் ஒய் திஸ் கொலவெறி பாடல் ஹிட் அடித்தது.
ஆஸ்தான மியூசிக் டைரக்டர்
அன்று முதல் தனுஷ்-அனிருத் கூட்டணி வலுவானது. தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனை உச்சத்திற்கு தூக்கிச்சென்றது அனிருத் இசை.
விஐபி படத்தில் அனிருத் போட்ட தீம் மியூசிக் தான் தனுசின் வொண்டர்பார் லோகோவின் மியூசிக்காக மாறியது.
வொண்டர்பார் லோகோ பார்த்து கைதட்டல் வருகிறதோ இல்லையே, அனிருத் மியூசிக் கேட்டவுடன் தானாகவே கைதட்டல் கிடைக்கும்.
இப்படி ஓருயிர் ஈருடல் என இருந்த நட்பில் நாளாக நாளாக விரிசல் ஏற்பட்டது. தனுஷ்-சிவகார்த்திகேயன் இருவருக்கும் உரசல் ஏற்பட்டது.
இதனால் அனிருத், சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையப்பதை தனுஷ் விரும்பவில்லை. அனிருத்தும் தனுஷிடம் சிறைப்பறவையாக வாழ விரும்பவில்லை.
இதனால் இவர்கள் பிரிந்தனர். அதன்பிறகு இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டது. அது நாளடைவில் ஈகோவாக மாறியது.
என் மியூசிக் இருப்பதால் தான் வொண்டர்பார் லோகோவிற்கே கெத்து என அனிருத் கூற உடனே தனுஷ் வொண்டர்பார் லோகோவை மியூசிக் இல்லாமல் வெளியிட்டார்.
அனிருத் இல்லாமல் ஒய் திஸ் கொலைவெறி போன்று ஒரு மாஸ் ஹிட் கொடுக்க தனுஷ் முயன்றார். ஆனால் அது முடியவில்லை. ஹிட் மட்டுமே கொடுக்க முடிந்தது.
தி ஒன் அண்ட் ஒன்லி யுவன்
உலக அளவில் ஒரு மாஸ் ஹிட் பாடல் வேண்டும். அதற்கு தனுஷ் தேர்வு செய்த நபர் யுவன் ஷங்கர் ராஜா.
ஆமாம், அவரின் முதல் மியூசிக் டைரக்டர் தான் இதற்கு சரியானவர் என யுவனை தேர்வு செய்தார். மாரி-2 படத்தில் ரவுடி பேபி பாடல் பிரபுதேவா நடன இயக்கத்தில் தனுஷ்-சாய்பல்லவி ஆடினார்.
ஒய் திஸ் கொலைவெறி ஆடியோ சாங் மட்டுமே ஹிட். விஷுவல் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. படமும் ப்ளாப் ஆகியது.
ஆனால், ரவுடி பேபி பாடல் ஆடியோ, விஷுவல் இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட். உலக அளவில் பாடல் ட்ரெண்டிங் ஆகியது.
பிரபு தேவா தன்னுடைய நடன அசைவுகளால், தனுஷ்-சாய்பல்லவியை செதுக்கி உருவாக்கி இருந்தார். யுவனின் துள்ளல் இசையில் ஆடியோ கேட்பதற்கு, விஷுவல் பார்பதற்கும் துள்ளலாக இருந்தது.
யுவன் இஸ் ஒன் அண்ட் ஒன்லி பெஸ்ட் என நம்மை கூற வைத்தார். தனுஷ் நீண்ட நாட்களாக கலங்கிய, ஏங்கிய சம்பவத்தில் இருந்து மீட்டவர் யுவன்.
18 years of dhanushism
யுவன்-தனுஷ்-செல்வராகன் கூட்டணி மீண்டும் எப்போது என்பது தான் நீண்ட நாள் கேள்வி? அடிக்கடி தனுஷ் மேடையில் தோன்றி புதுப்பேட்டை-2 படம் வரும் என நம்பிக்கை தரும் விதமாக கூறி வருகிறார்.
நாமும் காத்திருப்போம் இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள புதுப்பேட்டை-2 படத்தை எதிர்நோக்கி!!!