Home சினிமா கோலிவுட் தற்கொலைக்கு முயன்ற ஆச்சி மனோரமா மகன்: காரணம் தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க!!

தற்கொலைக்கு முயன்ற ஆச்சி மனோரமா மகன்: காரணம் தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க!!

1974
0
Bhupathi Suicide Attempt

Manorama Son Bhupathi; தற்கொலைக்கு முயன்ற ஆச்சி மனோரமா மகன்: காரணம் கேட்டால் ஷாக்காயிடுவீங்க! மது அருந்த முடியாத விரக்தியில் ஆச்சி மனோரமாவின் மகன் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆச்சி மனோரமாவின் மகன் பூபதி (Aachi Manorama Son Bhupathi) தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை வகுத்துக் கொண்டவர் நடிகை ஆச்சி மனோரமா. அதோடு, தன்னை மிஞ்ச யாருமில்லை என்று நிரூபித்துக் காட்டியுள்ளார்.

அம்மா, நகைச்சுவை கதாபாத்திரம், குணச்சித்திர ரோல் என்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் இவர் போன்று நடிப்பதற்கு ஆளே இல்லை என்று காட்டியவர்.

கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் நடித்த ஆச்சி மனோரமா கடந்த 2015 ஆம் ஆண்டு காலமானார்.

ஆச்சி மனோரமாவிற்கு பூபதி என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர் விசுவின் குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்துள்ளார். எனினும், பெரிதாக ஒன்றும் பேசப்படவில்லை.

சென்னை தியாகராய நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் மதுவிற்கு அடிமையானவராம்.

தற்போது நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், மது பிரியர்களுக்கு மதுபானங்கள் கிடைப்பதில்லை. மது பிரியர்கள் பலரும் இதன் காரணமாகவே மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்த பூபதி மது கிடைக்கவில்லை என்ற விரக்தியில் வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து தெரிந்ததும், அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆச்சி மனோரமாவின் மகனுக்கே இந்த நிலையா என்று பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleமாங்கல்ய பலம் தரும் நித்திய சுமங்கலி மாரியம்மன்
Next articleகொரோனாவால் ஆளே மாறிப்போன கவின்: வைரலாகும் புகைப்படம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here