Aadhi Nikki Galrani Love; ஆதி, நிக்கி கல்ராணி காதலா? விரைவில் திருமணம்? நடிகர் ஆதியும், நிக்கி கல்ராணியும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மிருகம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஆதி. அதன் பிறகு ஈரம், அய்யனார், ஆடுபுலி, அரவாண், யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் என்று பல படங்களில் நடித்துள்ளார்.
இதே போன்று தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் கிளாப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆதியும், நிக்கி கல்ராணியும் ஒருவரையொருவர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. கன்னட நடிகையான நிக்கி கல்ராணி தமிழ் சினிமாவில், டார்லிங் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு-2, கீ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு படங்களின் போது இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதி தனது தந்தையின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக யாருக்கும் அழைப்பு கொடுக்காமல், நிக்கி கல்ராணியை மட்டும் அழைத்துள்ளார்.
நிக்கி கல்ராணியும், பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு ஆதி தனது தந்தையின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினார். கொரோனா ஊரடங்கினால் யாரையும் அழைக்கவில்லை.
ஆனால் நிக்கி கல்ராணியை மட்டும் அழைத்து இருந்தார். அவரும் ஆதி குடும்பத்தினரோடு பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதையடுத்து, இருவரும் காதலிப்பது உண்மை தான் என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு சினிமா வட்டாராத்தில் கூறப்படுகிறது.