Aanchal Khurana: ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியில் சென்ற நடிகை ஆஞ்சல் குரானாவை தெரு நாய்கள் சுற்றி வளைத்து குதறிய சம்பவம் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ஆஞ்சல் குரானாவை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பாலிவுட் வட்டாரங்களில் கொஞ்சம் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியில் சென்ற ஆஞ்சல் குரானாவுக்கு இப்படியொரு சம்பவமா என்று பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் 3,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 111 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகை ஆஞ்சல் குரானா தனது நாய்க்குட்டியுடன் ஊரடங்கு உத்தரவு போட்டும் வெளியில் ஜாக்கிங் சென்றுள்ளார்.
மேலும், சிறிது தூரம் சென்ற அவரை அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் சுற்றி வளைத்த குரைத்துள்ளன. ஆஞ்சல் குரானாவின் குட்டி நாயை பார்த்தே குறைத்து உள்ளது.
Aanchal Khurana Dog Byte
திடீரென்று அந்த நாய்கள் இதனால் அந்த தெரு நாய்களை விரட்ட முயற்றுள்ளார் நடிகை. இதனால் அவர் மீது பாய்ந்து அவரது இடது பக்க இடுப்பு, வலது கால் முட்டியில் மற்றும் கழுத்து பகுதியில் கடித்துள்ளது.
இதனால், வலியால் துடித்த அவரை அக்கம் பக்கம் வீடுகளில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரை கடித்த நாய்களில் ஒரு நாய்க்கு ரேபிஸ் வைரஸ் தாக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு ரேபிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அவர் கூறுகையில், நான் ஜாக்கிங் சென்றேன். அப்போது ஊரடங்கு உத்தரவு என்பதால், சாலையில் யாரும் இல்லை. அப்போது நாய்கள் என்னை கடித்து விட்டன என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
புலிக்கு கொரோனா வைரஸ்
அமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. எனவே ஊரடங்கை எல்லோரும் பின்பற்றுவதே சிறந்தது.
கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து தான் பரவும் என்பதில்லை. மனிதரிடம் இருந்து விலங்குகளுக்கு சென்றும் மீண்டும் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பும் உள்ளது.