Home சினிமா கோலிவுட் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதில் சூர்யா மனிதாபிமானம் மிக்கவர்!

ஏழை எளிய மக்களுக்கு உதவுவதில் சூர்யா மனிதாபிமானம் மிக்கவர்!

381
0
Humanitarian Suriya

Humanitarian Suriya; சூர்யா மனிதாபிமானம் மிக்கவர்! ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வதில் சூர்யா மனிதாபிமானம் மிக்கவராக திகழ்கிறார்.

சூர்யா மனிதாபிமானம் கொண்டவராக திகழ்கிறார்.

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. நடிகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று திகழ்கிறார்.

யாரேனும் உதவி என்று கேட்டால் முதல் ஆளாக ஓடி வந்து உதவக்கூடியவர்.

அகரம் ஃபவுண்டேசன் (Agaram Foundation) மூலம் தரமான கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்டு இந்நிறுவனத்தை இயக்கி வருகிறார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு அகரம் ஃபவுண்டேசன் தொடங்கப்பட்டது. சமுதாயத்தில் பின்தங்கியிருக்கும் பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த ஏழை மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி அளிப்பதை நோக்கமாக கொண்டு அகரம் ஃபவுண்டேசன் செயல்பட்டு வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல், தரமான கல்வி நிறுவனங்களையும் அடையாளம் கண்டு தேவையான வசதிகள், கல்வி தரத்தை உயர்த்த முயற்சிப்பது, கிராமப்புற மக்களிடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது, கிராமப்புறங்களில் கல்வி நிலையங்களை உருவாக்குவது என்று சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

சூர்யா மட்டுமல்லாமல், நடிகர் சிவக்குமார், தனது சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மூலம், ஒவ்வொரு மாநிலத்திலும் மேல்நிலைத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிரார்.

1979 ஆம் ஆண்டு முதல் இந்த சேவையை நடிகர் சிவக்குமார் செய்து வருகிறார். தற்போது அவருடன் இணைந்து அவரது இளைய மகன் நடிகர் கார்த்திக்கும் இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அகரம் ஃபவுண்டேசன் மூலம் கல்வி உதவி அளிப்பது மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கும் உதவி செய்து வருகின்றனர்.

கார்த்தி தனது உழவன் அறக்கட்டளை மூலம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 5 விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கியுள்ளார்.

கஜா புயல் பாதிப்பு, கேரளா வெள்ளப்பாதிப்பு ஆகியவற்றிற்கும் நிதியுதவி அளித்துள்ளனர்.

சமீபத்தில், இதுவரை விமானத்தில் செல்லாத 100 குழந்தைகளை சூரரைப் போற்று படத்தின் மூலமாக விமானத்தில் ஏற்றி சென்றிருக்கிறார்.

இப்படி குடும்பத்தோடு சமூக சேவையில் சூர்யா, சிவக்குமார், கார்த்தி ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வளவு ஏன், நாட்டையே உலுக்கிய கொரோனா பாதிப்பால் அன்றாடம் பிழைப்புக்கே வழியில்லாமல் தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஃபெப்சிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

சூர்யா மட்டுமல்ல சூர்யாவின் ரசிகர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இது போன்ற் ஏராளமான உதவிகளை செய்து வரும் சூர்யா மனிதாபிமானம் கொண்டவர் என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

இதன் காரணமாக Humanitrian Suriya என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here