Home சினிமா கோலிவுட் சின்னத்திரை நடிகை தற்கொலை: தலைமறைவான காதலன் கைது!

சின்னத்திரை நடிகை தற்கொலை: தலைமறைவான காதலன் கைது!

221
0
Santhana Suicide

Actress Santhana Suicide; சின்னத்திரை நடிகை தற்கொலை: தலைமறைவான காதலன் கைது! சின்னத்திரை நடிகை தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்த அவரது காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரைச் சேர்ந்தவர் சின்னத்திரை நடிகை சந்தனா. இவர், குவார்ட்டர் லைப் என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால், இந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

சந்தனா கடந்த மாதம் 28 ஆம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்னதாக விஷம் குடிப்பதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்திருந்தார்.

மேலும், தனது தற்கொலைக்கு காதலன் தினேஷ் தான் காரணம் என்று அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

இது குறித்து பெங்களூர் சுத்தகுண்டா பாளையா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால், சந்தனா தற்கொலை செய்து கொண்டது அறிந்து தினேஷ் தனது குடும்பத்தினருடன் தலைமறைவானார். இந்த நிலையில், இன்று போலீசார் தினேஷை கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here