ஷோபனாவின் ஃபேஸ்புக் அக்கவுண்டை ஹேக் செய்த ஹேக்கர்ஸ்! நடிகை ஷோபனாவின் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஷோபனாவின் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இவ்வளவு ஏன், ரஜினிகாந்த், மம்மூட்டி நடிப்பில் வந்த தளபதி என்ற படத்தில், ஷோபனா நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், ஷோபனாவின் ஃபேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர்.
இதையடுத்து, அதில், வெளிநாட்டினரது வீடியோக்கள் இருந்துள்ளது. அதே போன்று 5 வீடியோக்கள் வரை அவரது பக்கத்தில் போடப்பட்டுள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஷோபனாவின் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.