Home சினிமா கோலிவுட் ஜோதிகாவை எதிர்த்து சீமானை சீண்டி வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி!

ஜோதிகாவை எதிர்த்து சீமானை சீண்டி வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி!

3085
0
Vijayalakshmi

Jyothika; ஜோதிகாவை எதிர்த்து வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி! ஜோதிகாவின் கோயில் சர்ச்சை கருத்து குறித்து அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஜோதிகாவை எதிர்க்கும் வகையில் நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.

விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோயில் பற்றி பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

ஜோதிகாவின் பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியது. இது குறித்து நடிகர் சூர்யா, இதில் எந்த தவறும் இல்லை என்று கூறி அறிக்கை வெளியிட்டார்.

இவ்வளவு ஏன், நடிகரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான், ஜோதிகாவின் சர்ச்சை கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி ஜோதிகாவின் சர்ச்சை பேச்சுக்கு, சீமான் அதற்கு ஆதரவு தெரிவித்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்திய சீமானை விஜயலட்சுமி வெளுத்து வாங்கி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

ஏற்கனவே விஜயலட்சுமி, சீமான் மீது பெண்கள் பற்றி இழிவாக பேசுவதாக புகார் அளித்திருந்தார்.

அவர்களுக்கு இடையில் பல பிரச்சனைகள் இருக்கும் நிலையில், தற்போது ஜோதிகாவுக்கு ஆதரவு தெரிவித்த சீமானை விமர்சிக்கும் வகையில், விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here