Home சினிமா கோலிவுட் அதித்யா வர்மா: பர்ஸ்ட்லுக்கிலேயே பாலாவுக்கு பல்பு: மிரட்டும் விக்ரம் மகன்!

அதித்யா வர்மா: பர்ஸ்ட்லுக்கிலேயே பாலாவுக்கு பல்பு: மிரட்டும் விக்ரம் மகன்!

1019
0
அதித்யா வர்மா

அதித்யா வர்மா: பர்ஸ்ட்லுக்கிலேயே பாலாவுக்கு பல்பு: மிரட்டும் விக்ரம் மகன்!

ஒரு படம் ஹிட் அடித்துவிட்டால், அப்படத்தை இன்னொரு மொழியில் ரீமேக் செய்வது வழக்கமான ஒன்று.

அதே படம், மொழி புரியாத மற்ற மாநிலங்களிலும் ஹிட் அடித்துவிட்டால் அதை ரீமேக் செய்ய அசாத்திய தைரியம் வேண்டும்.

த்ரிஷ்யம், ப்ரேமம், அர்ஜுன் ரெட்டி ஆகிய படங்கள் இவ்வரிசையில் அடங்கும். மலையாளத் திரைப்படமான ப்ரேமம் சென்னையில் 100 நாட்களைக் கடந்து ஓடியது.

இதன்பிறகும் அப்படத்தை இன்னொரு ஹீரோவை வைத்து எடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

அப்படி எடுப்பதாக இருந்தால், அதைவிட இரண்டு மடங்கு சிறப்பானதாக இருந்தால் மட்டுமே ரசிகர் ஏற்றுக்கொள்வார்கள்.

இல்லையெனில், அப்படம் படுதோல்வியில் முடியும் அல்லது எதிர்பார்த்த வெற்றியைத் தேடித்தராது.

அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழ் எடுக்க முடிவு செய்தபோதே, அப்படத்தை ‘டப்’ செய்தாலே படம் நன்றாக ஓடும் எனக் கருத்துக்கள் நிலவியது.

அதையும் மீறி வர்மா என்ற பெயரில் விக்ரம் மகன் துரூவ்வை கதாநாயகனாக வைத்து இயக்குனர் பாலா ரீமேக் செய்தார். ஆனால் படம் வெளிவரும் முன்பே அதைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எரிந்துவிட்டனர்.

காரணம், படத்தை கேவலமாக எடுத்துள்ளார் பாலா. மேலும் அர்ஜுன் ரெட்டி அளவு இந்தப் படம் இல்லை என விக்ரம் அதிர்ச்சி அடைந்துவிட்டார்.

இதனால் பாலாவைப் படத்தில் இருந்து தூக்கிவிட்டு வேறு இயக்குனரை வைத்து இயக்குவது என முடிவு செய்யப்பட்டு விட்டது.

அதன்படி, இப்படத்திற்கு ஆதித்யா வர்மா எனத் தலைப்பு வைத்துள்ளனர். அர்ஜுன் ரெட்டி படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றிய கிரீசாயா இப்படத்தை இயக்க உள்ளார்.

ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். அர்ஜுன் ரெட்டி படத்திற்கு இசையமைத்த ரதன் இப்படத்திற்கும் இசையமைக்க உள்ளார்.

தற்பொழுது ஆதித்யா வர்மாவின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு உள்ளது. பர்ஸ்ட் லுக் மிகவும் மிரட்டலாக உள்ளது.

பர்ஸ்ட்லுக்கை பார்த்த சிலர் பாலாவுக்கு பல்பு தான் எனக் கமெண்ட் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here