15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சக்தி சக்தி “சக்திமான்”! நாளை முதல் மீண்டும் சக்திமான் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சக்திமான் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.
திரையரங்குகள் மூடப்பட்டு சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு ஏன், குடும்ப பெண்களின் பொழுதுபோக்கு அம்சமான சீரியல்களின் ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புதிய தொடர்களின் எபிசோடுகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், இனி வரும் காலங்களுக்கு மீண்டும் பழைய தொடர்களையோ அல்லது புதிய தொடர்களின் எபிசோடுகளை மீண்டும் முதல் இருந்தோ ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், தூர்தர்ஷன் சேனலில், 1997 ஆம் ஆண்டுகளில் குழந்தைகளுக்கு சென்று சூப்பர்ஹிட் தொடராக வலம் வந்தது முகேஷ் கண்ணா நடிப்பில் வந்த சக்திமான் தொடரும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ தொடர் என்றும் சக்திமான் அறியப்பட்டது. 2005 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான சக்திமான் 520 எபிசோடுகள் வரை ஓடியுள்ளது.
இன்றும் சக்திமானுக்கு 90ஸ் கிட்ஸ்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், அவர்களை மகிழ்விக்கும் வகையில், மீண்டும் சக்திமான் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆம், நாளை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தூர்தர்ஷன் நேஷனல் டிடி 1 சேனலில் பிற்பகல் 1 மணிக்கு சக்திமான் ஒளிபரப்பாகிறது.
பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்கிற ‘சக்திமான்’ கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இந்தத் தொடரைத் தயாரித்திருந்தார்.
இந்திய மக்களிடையே அதிக ஆதரவை பெற்று வந்த இந்த தொடரின் 2 ஆம் பாகமும் விரைவில் வெளியாக இருக்கிறது.
இது குறித்து முகேஷ் கன்னா கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக சக்திமான் 2 பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும், இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரியும் இருக்கும்.
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு சக்திமான் 2ம் பாகம் குறித்து தெளிவாக சொல்லும் நிலையில் நான் இருப்பேன்.
அதற்கான எதிர்பார்ப்பு எப்போதும் இல்லாத அளவில் தற்போது அதிகமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
சக்திமான் 2 ஆம் பாகம் வருவதற்கு முன்னதாக மீண்டும் சக்திமான் முதல் பாகம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதே போன்று ராமாயணம், மகாபாரதம் ஆகிய தொலைக்காட்சி தொடர்களும் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.