கொரோனா வைரஸ் காரணமாக, மக்களை காப்பாற்றும் நோக்கத்தில் தமிழக அரசு தல அஜித்தின் உதவியை நாடியுள்ளது. அதற்கேற்ப அஜித்தும் மக்களுக்காக உதவி செய்துள்ளார்.
உலகத்தையே அச்சுறுத்தி வருவது கொரோனா வைரஸ். சீனாவில் தொடங்கிய தென் கொரியா, ஜப்பான், ஈரான், அமெரிக்கா, சிங்கப்பூர் என்று 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளைக் கடந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக, 32 பேர் பலியாகியுள்ளார். நாளுக்கு நாள் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என்று பலரும் நமக்காக இரவு, பகலாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ்க்கு எதிராக தல அஜித்தின் உதவியை தமிழக அரசு நாடியுள்ளது. ஏனென்றால், தமிழகம் முழுவதும் கொரோனா எதிராக மருந்து தெளித்து வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், அங்கு வேலையாட்களைக் கொண்டு மருந்து தெளிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.
அதற்காகத்தான் அரசு அஜித்தின் உதவியை நாடியுள்ளது. அஜித், பைக், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், ட்ரோன் ஸ்பெஷலிஸ்ட் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது.
கடந்தாண்டு அஜித் தலைமையிலான எம்.ஐ.டி. மாணவர்கள், ஆளில்லா விமானமான தக்ஷா விமானம் கண்டுபிடித்திருந்தனர்.
அந்த ட்ரோனை உருவாக்குவதற்கு அஜித்தான் முழுக்க முழுக்க எம்.ஐ.டி. மாணவர்களுக்கு பயிற்சியும் கொடுத்திருந்தார்.
அவர்களை வைத்து அஜித் உருவாக்கிய தக்ஷா என்ற ஆளில்லா விமானம் உலக அளவில் பல சாதனைகளை படைத்தது. அதுவும், உலகத்திலேயே அதிக நேரம் கிட்டத்தட்ட 6 மணி நேரம் பறக்கக் கூடிய ஆளில்லா விமான என்ற சாதனையை தக்ஷா ட்ரோன் படைத்திருந்தது.
அதோடு, சுமார் 10 கிலோ எடைகொண்ட ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தக்ஷா ட்ரோனால் எடுத்துச் செல்ல முடியும் என்பதையும் நிரூபித்துக் காட்டியது.
இந்த நிலையில்,தான், அஜித்தின் தக்ஷா ட்ரோனை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் மருந்துகளை தெளித்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
உலக அளவில் சாதனை படைத்திருந்தாலும் தமிழக மக்களுக்கே உதவுகிறது என்று எண்ணும் போது மனதில் சந்தோஷம்தான்.
வெறும் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த அஜித், கண்டுபிடித்த ட்ரோன் தமிழக மக்களுக்கே உதவியாக இருக்கிறது.
இந்த தக்ஷா ட்ரோன் மூலமாக இதுவரை 3 லட்சம் ஸ்கொயர் மீட்டர் வரையில் 900 லிட்டர் கிருமி நாசினி மருந்துகளை தெளித்துள்ளனர்.
இதன் காரணமாக தல ரசிகர்கள் அஜித்தை கொண்டாடிவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அரசுக்கு உதவியாக இருந்த அஜித்திற்கும், அவரது குழுவினர் மற்றும் தக்ஷா ட்ரோனுக்கும் வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துள்ளனர்.
அஜித் ரசிகர்களுக்கு ஒரேயொரு ஏக்கம் மட்டும்தான் இப்போது வரையிலும் இருக்கிறது. இதுவரை கொரோனா விழிப்புணர்வு வீடியோ எதுவும் அஜித் பதிவிடவில்லை என்பதுதான்.
யார் சொன்னால் கேட்கிறார்களோ இல்லையோ ஆனால், அஜித் சொன்னால், அவரது ரசிகர்கள் கண்டிப்பாக கேட்பார்கள். ஆதலால், கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ அஜித் வெளியிட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.