அஜித் வெளியில் தெரிந்து செய்த உதவி 1 கோடியே 25 லட்சம். தெரியாமல் வேறு அநேக தொழிளார்களுக்கு உதவி செய்து உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
பெப்சி ஊழியர்கள் சினிமா படப்பிடிப்பு நடைபெறாததால் வறுமையில் வாடி வந்தனர். இந்நிலையில் பெப்சி ஊழியர்களுக்கு 25 லட்சம் நிதி உதவி செய்து உள்ளார்.
நடிகர் அஜித்குமார் இந்தியா, தமிழகம் பொருளாதார பாதிப்பில் இருந்து மீள ஒரு கோடி 25 லட்சம் ரூபாய் நிதியை அளித்துள்ளார்.
50 லட்சம் ரூபாய் பிரதமர் நிதிக்கும், 50 லட்சம் ரூபாய் தமிழக முதலமைச்சர் நிதிக்கும், 25 லட்சத்தை பெப்சி தொழிலாளர்களுக்கும் அனுப்பி உள்ளார்.
வெறுமனே என்று இல்லாமல் இந்தியா, தமிழகம், திரைக்கலைஞர்கள் வரை உதவி செய்து நெஞ்சை உருக வைத்துள்ளார் தல அஜித்.
இதுபோக திரைத்துறை தொழிலாளர் சிலரின் குடும்பம் வறுமையில் வாடுவதை தெரிந்துகொண்ட அஜித்குமார், உடனடியாக தன்னுடைய மேனஜர் மூலம் பணம் கொடுத்து அனுப்பு உதவி செய்துள்ளார்.
அஜித்துக்கு அவர்களின் குடும்பம் நன்றியைத் தெரிவித்து உள்ளது. இரண்டு நாட்களாக சாப்பிடக்கூட வழியில்லாமல் இருந்த அவர்களுக்கு அஜித் தக்க சமயத்தில் உதவி செய்து உள்ளாராம்.