Thala Ajith; இப்போ மட்டுமல்ல எப்போதுமே மே 1 தல திருவிழா! அஜித் வரும் மே 1 ஆம் தேதி தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், மே 1 தல திருவிழா என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இப்போது மட்டுமல்ல தல அஜித்துக்கு எப்போதும் மே 1 தல திருவிழாதான்.
அஜித்துக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது தன்னம்பிக்கை, தைரியம், விடா முயற்சியால் தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்திற்கு வளர்ந்துள்ளார்.
அவரை தூற்றியவர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தனது முயற்சி, தன்னம்பிக்கை இதை மட்டுமே வைத்து சினிமாவில் சாதித்து வருகிறார்.
அதோடு கோடிக்கணக்கான ரசிகர்களை தனது பாதுகாப்பாக வைத்திருக்கிறார். அஜித்துக்கு ஏதாவது ஒன்றால் துடித்துப் போகும் ரசிகர்கள் அவருக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில், வரும் மே 1 ஆம் தேதி அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட இருக்கிறார். இதன் காரணமாக தற்போது மே 1 தல திருவிழா என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
அதோடு டுவிட்டர் அக்கவுண்ட் இல்லாத அஜித் ரசிகர்கள் உடனடியாக டுவிட்டர் அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும் என்று பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஒரு சாதாரண டுவிட்டர் ஹேஷ்டேக்கை பயன்படுத்தி 1,17,000 வரை டுவீட் செய்துள்ளனர். அதோடு வலிமை ஹேஷ்டேக்கையும் டிரெண்டாக்கி வருகின்றனர்.
வரும் 24 ஆம் தேதி அஜித் தனது 20 ஆவது திருமண நாளை சிறப்பாக கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் வலிமை. போலீஸ் கதையை மையப்படுத்தி இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வலிமை திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.