Home சினிமா கோலிவுட் தல61 அப்டேட்: மீண்டும் பிரபல இயக்குநருடன் இணையும் அஜித்?

தல61 அப்டேட்: மீண்டும் பிரபல இயக்குநருடன் இணையும் அஜித்?

262
0
Thala 61 Movie Update

Thala 61 Movie Update; தல61 அப்டேட்: மீண்டும் பிரபல இயக்குநருடன் இணையும் அஜித்? தல அஜித் தனது 61 ஆவது படத்திற்காக இயக்குநர் விஷ்ணுவர்தனுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

அஜித் தல61 படத்திற்காக இயக்குநர் விஷ்ணுவர்தனுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

குறும்பு படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். இப்படத்தைத் தொடர்ந்து அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், பில்லா, ஆரம்பம், யட்சன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குநரோடு மட்டுமல்லாமல், அஞ்சலி, சத்ரியன், இருவர், இசை, யட்சன் ஆகிய படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

இந்த நிலையில், ஏற்கனவே அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் ஆகிய ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் விஷ்ணுவர்தன் மீண்டும் தல அஜித்தை வைத்து அவரது 61 ஆவது படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் தல அஜித்துக்கு விஷ்ணுவர்தன் போனிலேயே கதை கூறினாராம். இந்தக் கதை தல அஜித்துக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.

இதன் காரணமாக விஷ்ணுவர்தன் – தல அஜித் ஹாட்ரிக் ஹிட் கொடுக்க இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

தல அஜித் தற்போது வலிமை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த பிறகே தான் அடுத்த படத்தில் நடிப்பேன் என்று அண்மையில், தயாரிப்பாளர் போனி கபூரிடம் கூறியதாக தகவல் வெளியானது.

ஆதலால் கொரோனா லாக்டவுன் முற்றிலும் சரியான பிறகு வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர், தல61 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleஸ்டெதஸ்கோப் உடன் சிவகார்த்திகேயன்: வைரலாகும் டாக்டர் பட புகைப்படங்கள்!
Next articleநிறவெறிக்கு எதிராக பாடல் மூலம் குரல் கொடுத்த கவிஞர் வைரமுத்து!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here