TV Serial; மறுபடியும் முதல இருந்தா? வேறு வழியில்ல: பழைய சீரியல்களை தட்டி தூக்கும் சேனல்கள்! சின்னத்திரை படப்படிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து எபிசோடுகளுக்கு என்ன செய்வதன்று தெரியாமல், பழைய சீரியல்களை மறுபடியும் ஒளிபரப்பு செய்ய தொடங்கியுள்ளன.
சின்னத்திரையில் மீண்டும் பழைய சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகமே அச்சத்தில் இருக்கிறது. ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக தொழில்துறைகள் பாதிக்கப்பட்டதோடு சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக சின்னத்திரை சீரியல்கள் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு 10 நாட்களை கடந்து விட்டது.
இதுவரை எப்படியோ புதிய சீரியல்களை ஒளிபரப்பிவிட்டனர். இனிமேல் அதற்கு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆம், தொடர்ந்து சீரியல்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை. இதனால், அடுத்த எபிசோடுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் டிவி சேனல்கள் குழப்பத்தில் இருக்கிறது.
இதுவரை இல்லாத நிலை, வரலாறு காணாத நிலை. டிவி சேனல்களின் சீரியல்களில் ஷூட்டிங் தடைபட்டுள்ள நிலையில், பழைய டிவி சீரியல்களை மறுபடியும் ஒளிபரப்பு செய்ய டிவி சேனல்கள் தொடங்கியுள்ளன.
புதிதாக வந்த டிவி சேனல்கள் தங்களது சீரியல்களின் முதல் எபிசோடுகளை மறுபடியும் ஒளிபரப்பு செய்ய தொடங்கியுள்ளன. சிலர், தங்களுக்கு விருப்பமான டிவி சீரியல்களை தேர்வு செய்து அதனை மறு ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சக்திமான் சீரியல் மறுபடியும் அதே சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதே போன்று ராமாயணம் நாடகமும் காலை 9 – 10 மற்றும் இரவு 9 -10 என்று இரு நேரங்களில் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.